கிரிராஜ்மகாராஜ் கோயில் .இது மானஸிகங்கா என்னும் குளத்தின் கரையில் இருக்கிறது.அங்கே குளிப்பதை மிகவும் புனிதமாக கருதுவதால் ,சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரினை ஒரு குழாய் மூலம் செலுத்துகிறார்கள்.அதன் பக்கங்களில் உள்ள பல துளைகள் மூலம் பலரும் குளிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பாறையின் பகுதியே கிருஷ்ணனாக வணங்கப்படுக்கிறார்.நாமே பால் அபிஷேகம் செய்யலாம்.
அடுத்ததாக கிரிராஜ் கோயில் என்னும் மற்றொரு கோயில் கோவர்த்தனத்தின் பேருந்து நிலைய வரிசையில் இருக்கிறது..அதன் முகப்பே கிருஷ்ணன் மலையை ஏந்தி நிற்கும் காட்சியுடன் இருக்கிறது.அங்கே தினமும் பல வகையான உணவு பண்டங்களை மலை போல வைத்து நிவேதனம் செய்கிறார்கள்.
கிரிவலம் வரும் வழியெங்கிலும் கோயில்களும் குளங்களும் தான்.
ராதாராணியின் பாதத்தடம்.
மக்கள் பொதுவாக
எல்லா நாட்களும்வலம் வருகிறார்கள்.முழுநிலவு அன்று அதிக எண்ணிக்கையில் வருகிறார்களாம்.
ஒரு கல்லை கூப்பியகைகளில் வைத்துகொண்டு சாலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அந்த கல்லை அடையாளமாக வைத்து கொள்கிறார்கள்.பின் அந்த இடத்திலிருந்து மீண்டும் விழுகிறார்கள்.இப்படி சுற்று வரமட்டும் மாதக்கணக்காகும்.
சாதாரணமாக கிரிவலம் 23 கிமீ.சுற்றிவர5 லிருந்து 6 மணிகள் ஆகும்.மீண்டும் ராதாகுளத்தினருகில் முடிக்கவேண்டும்.
மிகவும் சிறிய கிராமம் தங்கும் வசதியோ மற்றும் உணவு என்று பார்த்தால் கிடைப்பது அரிது.வெளி மாநிலத்து பயணிகள் பொதுவாக பிருந்தாவனத்தில் தங்கி அங்கிருந்துதான் கோவர்த்தன், வர்சானா போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.
2 comments:
அருமையாப் படங்களோடு இருக்கே. ஏன் யாரும் கவனிக்கலை?
அச்சச்சோ.......
நீங்க இந்தப் பதிவுகளைப் போட்டப்ப நான் இந்திய விஜயம். அதான் மிDஸ் செஞ்சுருக்கேன்(-:
2006 எல்லாம் ஆரம்பகாலம் பாருங்க :))
Post a Comment