December 21, 2006

முகவரியைத் தொலைத்தவர்கள்

படித்ததில் பிடித்தது.

முகவரியைத் தொலைத்தவர்கள்
--அப்துல் ரகுமான்


மனிதனின் உண்மையான முகவரி எது?
பெயரில் அவன் இருக்கிறானா? இல்லை.
பெயரென்பது வெறும் சப்த அடையாளம்.
இடுகுறி.
எந்த மனிதனும் அவன் பெயருக்குள் இல்லை.
இந்த உலகம் கதவு எண்ணை முகவரியாகச்
சொல்லுகிறது.
மனிதன் கதவு எண்ணிலா இருக்கிறான்?
இல்லை.
கதவு எண் மனிதனின் முகவரி அல்ல.
இந்த உலகம் வசிக்கும் வீட்டை முகவரியாக சொல்கிறது.
வீடு மனிதனின் முகவர் அல்ல.வீடு
உடலுக்கு ஒரு சத்திரம்.அவ்வளவுதான்.
சிலர் முகவர்ச் சீட்டில் தங்கள் தொழிலைக்
குறிப்பிடுகிறார்கள்.
மனிதன் அவன் பார்க்கும் தொழிலிலா
இருக்கிறான்? இல்லை.
தொழில் என்பது வயிற்றுத் தீயைத்
தணிப்பதற்கான தண்ணீர், அவ்வளவுதான்.
தெருவோ, ஊரோ, நாமோ ஏன் உலகமோ
கூட மனிதனின் முகவரி இல்லை.
இவை மனிதனின் முகவரி என்றால் சில
நேரங்களில் அவன் இவற்றையெல்லாம்
விட்டு விட்டு வெளியேற நினைக்கிறானே ஏன்?
மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது.
வாழ்க்கை என்பது இந்த முகவரியைத்
தேடும் முயற்சிதான்.
ஆனால், வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.
மனிதனுடைய துயரம் இதுதான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முகவரியையே
தேடி அலைய வேண்டியிருக்கிறது.
கவிஞர் ராஹி கூறுகிறார்:-
ராஹிக்கு என்ன ஆகிவிட்டது.
நண்பர்களே?
தயவு செய்து சொல்லுங்கள்
அவன் தன் தெருவிலேயே
தன் முகவரியை
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.

6 comments:

tamil said...

புலம்பெயர்ந்து வந்தவர்கள் முகவரியைத் தொலைத்துவிட்டு வந்தவர்கள்தான். படித்து சுவைத்த கட்டுரை பயனுள்ளது. வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு நன்றி ஷண்முகி.

வேலைக்காக ஊர்விட்டு ஊர் வரும்போதே எங்கள் மனம் வேதனைக்குள்ளாகிறது.

புலம் பெயர்ந்து முகவரி இழந்து மீண்டும் சொந்த இடத்தின் சுகம் அனுபவிக்க முடியாமல் போவது என்பது மிகவும் வருத்தமானது.

கண்மணி/kanmani said...

லஷ்மி
"கதவைத்திற காற்றுவரட்டும்" என்ற நித்தியானந்த சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் வீடுதான் ஒருவரின் முகவரி என்கிறார்.
வீடி என்றால் கல்லால்,மண்ணால் கட்டியது அல்ல.அங்குள்ள மனிதர்கள் யார் என்பது,என்ன செய்தார்கள் என்பதுதான் உண்மையான முகவரியாகும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது,என்று அப்துல் ரகுமான் அதையே தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன் கண்மணி.
மனிதன் என்ன செய்தான் எப்படி பட்ட வாழ்வு வாழ்ந்தான் என்பதே அவன் முகவரி .வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கண்மணி.

ramya said...

"வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.
மனிதனுடைய துயரம் இதுதான்."

nijamaga migavum unmaiyana oru vishayam...ulagil palar kann munne tholaithuvittu pin thedugirargal, vaazhkai endra onrai...

padiparukku inimai serkum blog...gud..

my first comment lakshmi..thangal varavai aavaludan edhirparkum kathukutti...

Unknown said...

படித்துண்டு பல்லுயிர் தீட்டுதல் கூட நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாகும்....தொடரட்டும் வாழ்த்துக்கள் லட்சுமி!...