March 4, 2009

சிண்ட்ரெல்லா கனவுகள்


சாம்பல் வண்ண கவுனும்
அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -
இல்லை
கை நிறைய வீட்டு வேலைகள் -இல்லை
குட்டி திட்டி வேலை வாங்கவும்
யாருமில்லை
மிரட்டி உருட்டி ஒளித்து வைக்கவும்
யாருமில்லை,
வீட்டிலோ எலிகளும் இல்லை
வீட்டுத்தோட்டத்தில் பூசனிக்காயுமில்லை
கனவில் மட்டும் கண்ணாடிக் காலணிகள்
தோன்றித் தோன்றி மறைகின்றன.
இரண்டுமே இருந்தென்ன பயன்?
எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?

49 comments:

பழமைபேசி said...

அட? நாங்கெல்லாம் எட்டத்துல அல்ல இருக்கோம்?? இஃகிஃகி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க பழமை பேசி.. நீங்க இதுல யாரு? மிரட்டி உருட்டறவங்களா? எலியா? செருப்பு திருடுபவரா?
பதிலுக்கு எப்படி சிரிக்க.. உங்க சிரிப்பு பதிவை திரும்ப புரட்டனும்.. :)

ராமலக்ஷ்மி said...

//சாம்பல் வண்ண கவுனும்
அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -
இல்லை
கை நிறைய வீட்டு வேலைகள் -இல்லை
குட்டி திட்டி வேலை வாங்கவும்
யாருமில்லை
மிரட்டி உருட்டி ஒளித்து வைக்கவும்
யாருமில்லை,
வீட்டிலோ எலிகளும் இல்லை
வீட்டுத்தோட்டத்தில் பூசனிக்காயுமில்லை//

அருமை அருமை, சரி..அப்புறம்..

//கனவில் மட்டும் காண்ணாடி காலணிகள்
தோன்றித் தோன்றி மறைகின்றன.//

ம்ம்ம்ம்....

//இரண்டுமே இருந்தென்ன பயன்?
எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//

அதானே? நல்லாக் கேட்டீர்கள்:))!

மிகவும் ரசித்தேன் முத்துலெட்சுமி.

Thamiz Priyan said...

சிண்ட்ரெல்லா நினைவுகள் எல்லாருக்கும் கனவில் மட்டும் தான் வரும் போல... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்ஷ்மி
\\
அதானே?நல்லாக் கேட்டீர்கள்:))!//
கேள்வி கேப்பது நம்ம உரிமை இல்லையா கனவா இருந்தாலும் ..:)

-------------------
நன்றி தமிழ்பிரியன்.. இது கனவல்ல.. கனவாக வந்தால் நினைவுல என்ன எழுதுவோம்ன்னு நினைத்து எழுதியது :)

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை!

பரிசல்காரன் said...

கவிதையை விட.. இந்தத் தலைப்பு ரொம்ப ஈர்க்குதுங்க! சூப்பர்ப்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிபி நன்றி.. இப்பல்லாம் கவிதைய நல்லா இருக்குன்னு சொன்னா ரொம்ப ரிஸ்க்காமே... பாத்து :)
-------------------
பரிசல் நன்றி .. உண்மையில் இந்த தலைப்பு வச்சு கதை எழுதறதா தான் திட்டம் .. :)

sindhusubash said...

தினமும் என் பொண்ணுக்கு சிண்ட்ரெல்லா கதை சொல்லணும்...நீங்க அழகான கவிதையா எழுதிட்டீங்க.....சூப்பர்ப்.

KarthigaVasudevan said...

//பரிசல்காரன் said...

கவிதையை விட.. இந்தத் தலைப்பு ரொம்ப ஈர்க்குதுங்க! சூப்பர்ப்!//

ரீப்பீட்டே...

தலைப்பு வெகு அருமை.கூடவே அந்த கண்ணாடி ஷூக்களும் கண்ணுக்கு இதம்.

KarthigaVasudevan said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிபி நன்றி.. இப்பல்லாம் கவிதைய நல்லா இருக்குன்னு சொன்னா ரொம்ப ரிஸ்க்காமே... பாத்து :)//

என்ன ரிஸ்க் ?!!!

சந்தனமுல்லை said...

புதுசா செருப்பு கேட்ட இபப்டி ஒரு ஐடியாவா! ஆகா..;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தூயா நன்றிப்பா :)
-------------------
சிந்து என் பொண்ணுக்கு இந்த கதை சொல்லி இருக்கேன்.. ஆனா பையனுக்கு தினமும் ஜிஞ்சர் ப்ரட் மேன் தான் வேணும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மிஸஸ்டவுட்.. ரிஸ்க் என்னன்னா.. எழுதினவங்களை விட்டுட்டு பாராட்டினவங்களை திட்டுவாங்களாம்.. :) (கேள்விப்பட்டேன்)

( டோண்ட் வொர்ரி நான் நீங்க சொன்ன அந்த கவிதை ரிஸ்க் ரகசியத்தை யாருகிட்டயும் சொல்லமாட்டேன்)
-----------------------
முல்லை.. நீங்க கமெண்ட் செய்ததும் ஒன்று நினைவுக்கு வருது . புதுசு வாங்கிடலாம்ன்னு.. :)

கவிதா | Kavitha said...

படம் அழகா இருக்குங்க..!! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதா நன்றி.. :)
படம் கூகிளில் தேடிப்போட்டது நாந்தானே..நல்லாத்தானே இருக்கனும்..

Poornima Saravana kumar said...

முத்துக்கா கலக்கல் கவிதை:)
அதிலும் படம் அழகோ அழகு!!

கோபிநாத் said...

சாரி...அவுட் ஒப் த சப்ஜெக்ட் ;)

Anonymous said...

ரொம்ப அருமைப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

sumazla,கோபி, பூர்ணிமா மறுமொழிக்கு நன்றி நன்றி :)

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி...
http://sandanamullai.blogspot.com/2009/03/blog-post_04.html இங்கே பாருங்க! :-)

ஷைலஜா said...

கவிதை அசத்தல்! நீங்க சொல்லாததையும் சேர்த்து சொல்லுகிறது !

Anonymous said...

ரொம்ப நல்லா இருந்தது உங்க கவிதை முத்து லட்சுமி -கயல் விழி. முல்லை மூலமாக உங்கள் வலைப்பூ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முல்லைக்கு தான் என்னுடைய நன்றிகள் சொல்லணும். மேலும் நிறய எழுத வாழ்த்துக்களுடன்..

அன்புடன்,
ஜானு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷைலஜா.. வாங்க.. நன்றி ப்பா..
:)
----------------
வாங்க ஜானு.. :) மகிழ்ச்சி
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்பு, கவிதை, குறிப்பாக அந்தப் படம் எல்லாமே ஜோர்.

குடுகுடுப்பை said...

சிண்ட்ரெல்லா கேரக்டர வெச்சு கவிதை.
நல்லது, அந்த கதைப்புத்தகம் சொல்லும் வெறுப்புக்கதைகளை என் மகளுக்கு படிக்க பயந்து ஒளிச்சு வெச்சிட்டேன். ஆனா நீங்க அருமையா கவிதை வடிச்சிட்டீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமிர்தவர்ஷிணி அம்மா நன்றிப்பா.. :)
---------------
குடுகுடுப்பை.. ஒளிச்சு வைக்காதீங்க எப்படியும் பள்ளிக்கூடத்துல லைப்ரரியில் எடுத்துப் படிக்கத்தானே போறா.. சொல்லிட்டு அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. சரியாப்போயிடும்..விருப்பும் வெறுப்பும் கலந்தது தானே உலகம். சித்தார்த்தன் அறியாம வளர்ந்தமாதிரி வளரமுடியுமா ..? :)

☀நான் ஆதவன்☀ said...

அட கவிதை புரியுதுங்க :)

☀நான் ஆதவன்☀ said...

நல்லா இருக்குது சிண்ட்ரெல்லா கனவுகள்....

அமுதா said...

/*எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை*/
இன்னும் தொலைக்கலையா நீங்க? :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன்.. இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதை அதனால் இந்த கவிதை உங்களுக்கு புரிஞ்சுருக்கலாம் ஆனா எல்லா கவிதையும் புரிஞ்சுடுன்னு நினைக்காதீங்க சரியா.. ? :)
யாருமே கவனிக்காத பிழை உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது..குட்..
காண்ணாடிய கண்ணாடியா மாத்திட்டேன்.. என் கண்ணாடிய துடைச்சு மாட்டிக்கிட்டேன்

--------------------------
அமுதா.. எங்கங்க இப்பல்லாம் எங்க போனாலும் செருப்பை மாட்டிக்கிட்டே போகலாம்.. இல்லாட்டி டோக்கன் சிஸ்டம் இருக்கு.. தொலைக்கவே முடியலங்க.. அதனால் புதுசுவாங்கவும் முடியறதில்ல.. :)

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு கவித/கவுஜ:)
அப்புறம் கல்யாண மண்டபம் போனீங்கன்னா செருப்ப தொலைக்கலாமே. அனுபவம்:(

குடுகுடுப்பை said...

குடுகுடுப்பை.. ஒளிச்சு வைக்காதீங்க எப்படியும் பள்ளிக்கூடத்துல லைப்ரரியில் எடுத்துப் படிக்கத்தானே போறா.. சொல்லிட்டு அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. சரியாப்போயிடும்..விருப்பும் வெறுப்பும் கலந்தது தானே உலகம். சித்தார்த்தன் அறியாம வளர்ந்தமாதிரி வளரமுடியுமா ..? :)//

நீங்க சொல்றது சரிதான்.அந்தப்பக்குவம் நான் அடையனும்.
குகு

நசரேயன் said...

கனவு மெய்ப்பட வேண்டும் சிண்ட்ரெல்லாவுக்கு
தொலைக்கும் போது எங்க வீட்டு பக்கம் வரவும்

pudugaithendral said...

பாராட்டாம இருக்க முடியலைப்பா.

மிக மிக ரசித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன்.. கனவுல தொலைக்கும் போது சிண்ட்ரெல்லா எங்க போகமுடியும்.. தூக்கத்துல நடக்கிற வியாதி இருந்ததா ஃபேரிடேல்ல வரலையே.. :)
-----------------------
வித்யா என்ன காலத்துல இருக்கீங்க.. கல்யாணமண்டபத்துல எல்லாம் வெளியே யாரும் கழட்டறதில்ல இப்பல்லாம்.. மேடையில் ஏறும்போது மட்டும் சிலர் ஓரமா கழட்டறதுண்டு..
-------------------
புதுகைத்தென்றல்..நீங்கள்ளாம் பாராட்டாம வேற யாரு பாராட்டற்து :)

ச.பிரேம்குமார் said...

ஓ! நீங்க தான் இதை ஆரம்பிச்சு வச்சதா?? கவிஜ அருமையா இருக்கு அக்கா

Unknown said...

ரசித்தேன்.அமர்க்களம்.எந்த நெடியும் (பிரசார/அறிவுரை/மிகை உணர்ச்சி)இல்லை.நல்லா இருக்கு.சிண்ட்ரெல்லா கதை அறிந்திருந்தால் கவிதைப் புரியும்.

சின்ன வேண்டுகோள்.

//இரண்டுமே இருந்தென்ன பயன்?
எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//

இந்த கேள்விடைப் இல்லாமல் இருந்தால் “கவித்துவம்” கூடும்.முடிந்தவரை தவிருங்கள்.

வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

:)))))))))))))))))


super...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரேம்குமார் நன்றி
தாக்கம் அதிகமாகி முல்லை தொடர்ந்துட்டாங்க.. :)
------------------
ரவிஷங்கர் ... நன்றி..
உண்மையாகவே இந்த ஃபேரிடேல் தெரியாத ஒருத்தர் கவிதை புரியலன்னு தனியா விளக்கம் கேட்டுக்கிட்டார்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி.. :)

Vijay said...

இந்த கவிதையின் அடிநாதம் கிழிபட்டது கேள்விகளால். செருப்ப எங்க தொலைக்கலாம், புதுசு எப்போ வாங்கலாம்ன்னு, பராவயில்ல, நல்லா சமாளிக்கிறீங்க. கனவுலகமும் உலகாயமும் மாறி மாறி பரிமளிக்கின்றன. எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விஜய் ரொம்ப நன்றி. :)எல்லாத்தையுமே சமாளிக்கத்தானே வேணும் வாழ்க்கையில்..

rapp said...

//அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -
இல்லை//
என்கிட்டே நெறைய இருக்கு:):):)

//குட்டி திட்டி வேலை வாங்கவும்
யாருமில்லை//

பொண்ணு வீட்ல இல்லையா:):):)

//எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//

என்னை ஒருதரம் கனவுல உங்க வீட்டுக்கு கூப்பிடுங்க பிரச்சினை தீர்ந்தது:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப்.. ஆமா நீ சொல்றமாதிரி இப்பல்லாம் விரட்டி வேலை வாங்கறது என் பையனும் மகளும் தான்.. :(

காட்டாறு said...

பெருமூச்சி ஒன்னு கேக்குது? வலியின் ஆழம் ஜாஸ்தியோ? கவிதை நல்லாயிருக்குது.

காட்டாறு said...

//இரண்டுமே இருந்தென்ன பயன்?
எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//

இதெல்லாம் ரொம்ப ஈசி. வீட்டுல நாய் வளர்க்கவும்.

அன்புடன் அருணா said...

//எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//

இதையும் சேர்த்துக்கோங்களேன்....
தொலைத்ததும் எப்போது தேடிவருவான் ராஜகுமாரன்?
அன்புடன் அருணா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு கதைக்கு கை கால் மூக்கு வலி இல்லை..

நாய் ஆமா செருப்பை பிச்சிபிச்சி விளையாடுமில்ல.. :))

------------------------
அன்புடன் அருணா.. நன்றி :) அது உட்பொருள் தானே ..