March 30, 2009

வானவில் இற்றைகள் (அப்டேட்ஸ்?)

முன்பு புதுமொழின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.. இப்பவும் சில புதுமொழிகள் பேசுவார் எங்க பையன். தமிழும் ஹிந்தியும் கலப்பதும் அவருக்கு இன்னும் ப்ரச்சனையாகவே இருக்கிறது. இது இப்பத்தைய புதுமொழி.
வாக்கியத்தில் அமை:
மோசம் - வாசம்( மோந்து/முகர்ந்து பார்க்கும் வாசம்)
புஸ்ஸா= குஸ்ஸா( கோபம்)

1. மோசம் பாத்தேன் இது பூஸ்ட் ..அம்மா நான் டீ இல்லாட்டி காப்பி தான் கேட்டேன்.
2.அம்மா மிட்டாய் தரப்போறயா இல்லையா? எனக்கு புஸ்ஸா வரப்போது.
-------------------
மூணுசக்கர சைக்கிளில் ஒரு பந்தை பின்னால் கீழே அமிழ்த்தி வைத்துவிட்டு ...இது என்னடான்னா? ஸ்டெப்னி டயராம்..
----------------------------------

எதோ யோசனையில் ஆமாம்ன்னு சொல்ல நான் புரிச் புரிச் என்று சத்தம் மட்டும் செய்தேன்.. அம்மா என்ன சத்தம் அது?
எந்த சத்தம்?
புஸ் புஸ் ன்னுசத்தம் போட்டியே
ஆமாம்ன்னு சொன்னேன் அப்படி
ஓ புஸ் புஸ்.. :)
----------------------------
பெரியவனானதும் அதெல்லாம் பாத்துக்கலாம்டா
நான் தான் பெரிய்ய்ய்ய்ய்யவனாகிட்டேனே..
(குனிந்து காலிலிருந்து தலை வரை இரண்டு கையாலும் தடவியபடி )
--------------------------------------------------

கலரடிக்கிறேன்னு ஏண்டா எல்லத்தையும் வெளியே வரும்படி செய்யற ..மேடம் திட்டபோறாங்கன்னு சொன்னா..இதை நான் என்ன ஸ்கூலுக்கா கொண்டுபோகப்போறேன்..
வீட்டுல தான் சரியா வராது. அங்க எனக்கு நல்லா கலர் செய்யவரும்.
--------------------------------------
சபரி போதும்ப்பா விளையாடியது வந்து சாப்பிடு!!
குட் பாய் தானே!
ஆமா... ஆனா நீ விளையாட விடலை .. அதனால் பேட் கேர்ள்.
------------------------------
குளிக்கவான்னா ஓடுவார்.. தலையில் அழுக்கு இல்லை .. தலையில் ஊத்தாதே ப்ளீஸ் ப்ளீஸ் ... ஆயிரம் ப்ளீஸுக்கு அப்பறமும் தலையில் தண்ணிய என்னிக்காச்சும் ஊத்தும் ராட்சஸி நான்..
இரண்டு பொம்மைகளைக் குளிப்பாட்ட வா என்றதும் ஓடிப்போய் இரண்டு பொம்மையோட வருவான்.. அதற்கும் சோப்புப் போட்டு அழாமல் குளிச்சிட்டு வெளியே வந்து தானே உடைகளைப்போட்டுக்கொண்டு .. தயாராகிறார். ஒன்றாம் தேதியிலிருந்து பெரிய பள்ளிக்கு செல்ல இருக்கிறார்.
பஸ்ஸில் ஒழுங்காய் அமர்ந்து போவானா? மேமிடம் பணிவோடு இருப்பானா? கேள்விகள் கேள்விகள்....

28 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்டு!

நட்புடன் ஜமால் said...

\\பெரியவனானதும் அதெல்லாம் பாத்துக்கலாம்டா
நான் தான் பெரிய்ய்ய்ய்ய்யவனாகிட்டேனே..
(குனிந்து காலிலிருந்து தலை வரை இரண்டு கையாலும் தடவியபடி )\\

இரசித்தேன்.

Thamiz Priyan said...

எல்லா வீட்டிலும் ஒரே கதை தான்.. :)
ஆனா எங்க வீட்டு வாண்டு குளிக்கனும்னு சொன்னால் டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு அவனே குளியறையில் போய் உட்கார்ந்து கொள்வான். வீடியோ கூட இருக்கு..ஆனா குட்டிப் பையன் டிரஸ் இல்லாம குளிக்கிறானே.. வரலாறு முக்கியமாச்சே.. ;-))

ராமலக்ஷ்மி said...

//பெரியவனானதும் அதெல்லாம் பாத்துக்கலாம்டா
நான் தான் பெரிய்ய்ய்ய்ய்யவனாகிட்டேனே..
(குனிந்து காலிலிருந்து தலை வரை இரண்டு கையாலும் தடவியபடி )//

இது நல்லாயிருக்கே:)!

//பஸ்ஸில் ஒழுங்காய் அமர்ந்து போவானா? மேமிடம் பணிவோடு இருப்பானா? கேள்விகள் கேள்விகள்....//

அதெல்லாம் இருப்பான் இருப்பான்:)!

Vidhya Chandrasekaran said...

\\குளிக்கவான்னா ஓடுவார்.. தலையில் அழுக்கு இல்லை .. தலையில் ஊத்தாதே ப்ளீஸ் ப்ளீஸ் ... ஆயிரம் ப்ளீஸுக்கு அப்பறமும் தலையில் தண்ணிய என்னிக்காச்சும் ஊத்தும் ராட்சஸி நான்.. \\

சேம் பிளட்:)

சென்ஷி said...

ஒரே வார்த்தையில சொல்லணும்னா சூப்பர்.. :)

சென்ஷி said...

/மூணுசக்கர சைக்கிளில் ஒரு பந்தை பின்னால் கீழே அமிழ்த்தி வைத்துவிட்டு ...இது என்னடான்னா? ஸ்டெப்னி டயராம்.. //

:))

கலக்கல்... சார் இப்ப பெரியவராகிட்டாரு. அதனால மரியாதையோட கொடுத்திருக்கீங்க

சந்தனமுல்லை said...

ஏழு வண்ணங்களும் ஜொலிக்குதே!

துளசி கோபால் said...

அண்ணாத்தைக்கா சமாளிக்கத் தெரியாது?

டீச்சருக்குப் பெட்(pet)ஆகப்போறார் பாருங்க.

தங்கையே அப்படி ஆனா அண்ணனாலே ஆகமுடியாதா என்ன? :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்ரியன் வரலாறு முக்கியம் ... அதன் ரகசியங்களும் முக்கியம்.... பாதுக்காத்துவைங்க.. :)
--------------------------
நன்றி ஜமால்..
------------------------
நன்றி ராமலக்ஷ்மி ..நீங்கள்ளாம் சொல்லிட்டா சரிதான்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்யா அப்ப நீங்களும் ஒரு இரக்கமில்லா ராட்சஸின்னு சொல்லுங்க :)
---------------------
ஆமா சென்ஷி.. ஐயாவுக்கு ஆர் விகுதி போட்டுரவேண்டியது தான்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி முல்லை .. :)
-----------------------
துளசி நீங்க அப்படி வர்ரீங்களா.. ம் உங்களளவுக்கு முடியுமா அவனுக்கு.. :)
அவன் அக்காவே அவ பேருக்கு ஏத்தபடி தம்பி இருக்கனுமேன்னு கவலையில் இருக்கரா..சீனியருக்கு ஜூனியர் ஆகபோறானில்ல அதே பள்ளிக்கு ...

☀நான் ஆதவன்☀ said...

க்யூட்....இது தான் குழந்தை..முடிஞ்சா அவன் போட்டோவை போடுங்க

goma said...

யாழும் குழலும் இனிதென்று சொல்பவர்கள் குழந்தையின் மழலை சொல் கேட்டு ரசிக்காதவர்ன்னுதான் சொல்லணும்
நல்லாத்தான் சொன்னாரு வள்ளுவர்

Iyappan Krishnan said...

குழலினிது யாழினி தென்பார் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாத வர்


உண்மைதான்... தம்மக்கள் மழலைச்சொல் ஒரு காவியம்

ஆயில்யன் said...

சூப்பரூ! :))

நிஜமா நல்லவன் said...

ஆஹா தலைப்பு சூப்பர்!

sindhusubash said...

முதல்முதலா ஸ்கூலுக்கு என் பொண்ணை அனுப்பிட்டு நான் தான் அழுதுட்டு வந்தேன்..இப்ப ஆறரை வயசாகுது அவளுக்கு..தனியாவே யூனிபார்ம்,ஷீ எல்லாம் போட்டுக்கறா..குழந்தைதனம்தான் எவ்வளவு அழகு!!!!!!

அபி அப்பா said...

நாலு எழுத்துல சொல்ல போனா "சூப்பர்"!

ஆனா நம்ம வீட்டில அழகான ராட்சசன்! பைப்பை திறந்து விட்டுகிட்டு நிக்குது:-)))

குழந்தைகள் என்றாலே அழகு தான் போங்க!

அபி அப்பா said...

தலைப்பை பார்த்ததும் எதுனா கவிதையா இருக்குமான்னு சாமிய வேண்டிகிட்டே ஓப்பன் பண்ணினேன்)
வயித்துல பாலை வார்த்தீங்க:-))

மங்கை said...

//ஆமா... ஆனா நீ விளையாட விடலை .. அதனால் பேட் கேர்ள்.\\

yes sabhari...athu correct...100% correct..ha hah a

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன் ..நன்றி.. அதான் ஆங்கில லிங்க் இருக்கே சைடுல அதுல பார்க்கலாம்..:)
------------------------------
கோமா வாங்க.. அவங்க கோச்சுக்கிட்டாலும் அழகா இருக்குல்ல.. :))
--------------------
ஜீவ்ஸ் இந்த தொடர்காவியத்தை நாமெல்லாம் எழுதித்தள்ளூவோம்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்..
-------------
நன்றி நிஜம்மா நல்லவன்.. நீங்க தானே அன்றைக்கு தலைப்புக்கு பல ஆராய்ச்சிக்கட்டுரைகளை தந்து உதவியவர் நீங்க சொன்ன இற்றைப்படுத்துதலைத்தான் நான் இப்படி ஆக்கிட்டேன்.. நன்றி நன்றி.. :)
------------------------------
சிந்து என் மகளை பெரிய பள்ளிக்கு அனுப்பும் போது இத்தனை தடுமாறியதாக நினைவில்லை.. இவன் 4 வயது வரையும் செல்லமாக இருந்துவிட்டானோ என்று கூட யோசிக்கிறேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள்ளாம் கவிதை எழுத ஆரம்பிச்சாச்சே அப்பறம் என்ன .. பயம் அபி அப்பா.. :)
நட்ராஜ் வீரன்...
-------------------------------
மங்கை இப்பத்தான் முற்பகல் செய்யினுக்கு விளக்கம் தெரியுது.. உங்க மகளுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் இன்னிக்கு நீங்க என் மகனுக்கா.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ச்சின்னப்பையன் :) இப்படித்தான் சிரிப்பாக்கிடக்கு தினமும்..

கோபிநாத் said...

;-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

. மோசம் பாத்தேன் இது பூஸ்ட் ..அம்மா நான் டீ இல்லாட்டி காப்பி தான் கேட்டேன்.
2.அம்மா மிட்டாய் தரப்போறயா இல்லையா? எனக்கு புஸ்ஸா வரப்போது. //

cchoooooo chweeeeet :)

எனக்கு இந்தப் பதிவோட தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு