August 17, 2010

ஊஞ்சல் ஏறி ஆடம்மா

நாம் விதைத்து வைக்கின்ற கனவுகள் எல்லாம் ஆலமாய் வளராவிட்டாலும் சிறு போன்சாய் மரங்களாகவாவது வளர்ந்து நின்று மனம் குளிர்விக்கிறது.முற்றத்து வீட்டு ஊஞ்சல் கனவை விதைத்த போது வாழ்த்திய நண்பர்களிடம் மகிழ்வையும் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி .

பொள்ளாச்சியில் எதிர் வீட்டில் இருந்த ஊஞ்சலைப் போலவே வேண்டுமென்று அவர்கள் வாங்கிய அதே பாலக்காடு க்ளோபல் பர்னீச்சரைத் தேடிப்போயிருந்தோம். நாங்கள் சொன்னது போலவே செய்து தந்தார்கள் . கேரளா ரோட் வேஸில் அழகாக பேக் செய்து வீடு வந்து சேர்ந்தது. அதற்கான சங்கிலிகள் கூட அங்கிருந்தே வாங்கி வந்திருந்தோம். நட்டுக்கள் வெளியே தெரியும் படியான எதிர் வீட்டு ஊஞ்சலிலிருந்து புது முறையாக ஊஞ்சல் காலுக்குள் நட்டுகள் மறைவாக இருக்கும்படி செய்திருந்தார்கள்.

என்னவோ உள்ளூர இந்த தளம் கொக்கிகள் எல்லாம் இத்தனை கனமான ஊஞ்சலைத்தாங்குமோ என்கிற பயம் உள்ளூர இருந்தது. நமக்கு மட்டும் தான் பயமோ என்று பார்த்தால் பாருங்க துளசி கூட பயந்திருக்காங்க அவங்க வீடு கட்டும் போது ..

செயின் மட்டும் 9 கிலோ வருகிறது. ஊஞ்சல் 40 கிலோ வருமா இருக்கலாம்.. நான் எத்தனை கிலோ என்று கணக்கு போட்டபடி மேலே பார்ப்பேன். கணவரும் உக்கார வந்தால் மரியாதையா எழுந்துகொள்கிறேன் :P பயம் போக நாளாகலாம். ( ஊஞ்சலைச் சொன்னேன்)




இது தான் எங்க வீட்டு ஊஞ்சல். படிப்போ , அரட்டையோ மகளுக்கு எல்லா நேரமும் இப்போது ஊஞ்சலில் தான். இரண்டு கம்பிகளுக்கு இடையில் ஏறி நின்றோ கம்பிகளைப் பிடித்தபடி தலைகீழாய் தொங்குவதோ என சாகசம் காட்டுவான் மகன். சில சமயம் குட்டித்தூக்கம் கூட போடலாம் .

வடநாட்டில் இதுபோன்ற பலகை ஊஞ்சல் பெரிதாக பழக்கமில்லாததால் பார்க்கும் குழந்தைகள் எல்லாம் இத்தனை பெரிய ஊஞ்சலா என்று ஆச்சரியம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தப் பாடலைக் கேளுங்களேன் கவிஞர் துரைசிங்கம் எழுதி பைரவி என்கிற சிறுமி பாடிய’ ஊஞ்சல் ஏறி ஆடம்மா’..அருமையாக இருக்கிறது.
ஊஞ்சல் ஏறி ஆடம்மா..
........................
................
ஊக்கம் கொண்ட மனிதரே
உயர்வு காண்பர் வாழ்வினில்
என்ற உண்மை தன்னை
நமக்கு ஊஞ்சல் சொல்லுதே
ஊஞ்சல் ஏறி ஆடம்மா
உயர பறக்குது பாரம்மா
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளவே
நீயும் நானும் ஆடுவோம்


33 comments:

Chitra said...

கலை அம்சத்தோடு, ரொம்ப அழகாக இருக்குங்க.... What a blessing!
Enjoy.....

துளசி கோபால் said...

சூப்பர் ஊஞ்சல்.

அழகா அம்சமா இருக்கு.

எஞ்சாய் எஞ்சாய்.

நானும் ஒரு நாள் வரேன்.

அதுக்கு முன்னால் ஒரு யானையை உக்காரவச்சுத் தாங்குமான்னு பரிசோதிச்சு வையுங்க.

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா :) மறுபடியும் வாழ்த்துகள்க்கா. குழந்தைகளுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு ஊஞ்சல் விளையாட்டு. சபரிய சந்தோஷத்துல பிடிக்க முடியாதே :)

சந்தனமுல்லை said...

WoW! Wonderful. thanx for sharing!

☀நான் ஆதவன்☀ said...

@துளசி டீச்சர்

:)))))))))

கோபிநாத் said...

ம்ம்ம்....சூப்பரு ;))

ஆடக்கா...நீங்க நன்றாக ஆடக்கா ;))

ஆயில்யன் said...

என் ஜாய்!!!

ஹம்ம்ம்ம்ம் எனக்கும் ஊஞ்சல் ஆசை இன்னும் நிறைவேறல! இந்த லீவுல போறச்ச கண்டிப்பா நிறைவேத்திடணும்! :)

ஆயில்யன் said...

//
ஆடக்கா...நீங்க நன்றாக ஆடக்கா ;))
//


;))))

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

Anonymous said...

சின்ன வயசில ஊஞ்சல் ஆடினது ஞாபகம் வருது

சாந்தி மாரியப்பன் said...

ஊஞ்சல் அழகா இருக்குங்க.. தளத்திலுள்ள கம்பியில்தானே ஊஞ்சலின் ஹூக்கை இணைச்சிருப்பீங்க.. பயப்படாம ஆடுங்க. எங்கூட்ல ஜூட் ஊஞ்சல்ல நான் உக்காந்தே ஒண்ணும் ஆகலை :-)))))

ஹுஸைனம்மா said...

அழகு, கொள்ளை அழகு. சந்தோஷமா ஆடுங்க!!

settaikkaran said...

வயிறு நிறையா சாப்பிட்டுப்புட்டு, ஊஞ்சலிலே படுத்து, தலைக்குக் கையை மடக்கிவச்சிக்கிட்டு தூங்குற சுகமிருக்கே! :-)

வாழ்த்துக்கள்! என்ன்ன்ன்ன்ஜாய்!

மங்கை said...

அருமை...ஊஞ்சல் ஆசை எப்பவும் போகாது....வீடே அழகாயிடும்

வெங்கட் நாகராஜ் said...

ஊஞ்சலில், தலைக்கு ஒரு கையை வைத்து, ஒருக்களித்து படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடும் சுகம்...... ஹூம்ம்ம்ம்ம்.... அழகான ஊஞ்சல்.. வாழ்த்துக்கள்.

வெங்கட்.

அம்பிகா said...

ஊஞ்சல்.., கொள்ளை அழகு.

"உழவன்" "Uzhavan" said...

புளியமரத்திலும் வேப்ப மரத்திலும் ஊஞ்சல் கட்டி விளையாடி, அறுந்து விழுந்த கதையெல்லாம் உண்டு :-)

நாடோடி said...

ஊரில் கொண்டாடும் ஓண‌ம் ப‌ண்டிகையை நினைவு ப‌டுத்திட்டீங்க‌... ஓண‌ம் என்றால் ஊஞ்ச‌ல் தான் சிற‌ப்பு..

பவள சங்கரி said...

ஊஞ்சல் அருமையா இருக்குங்க. நல்லா enjoy பண்ணுங்க.

Thekkikattan|தெகா said...

beautiful! enjoy...

@ Thulsi - :)))

ராமலக்ஷ்மி said...

ஊஞ்சல் அழகு. கனவோடு நிறுத்திவிடாமல் அதை நனவாக்கிய விதம் மிக மிக அழகு.

'பரிவை' சே.குமார் said...

ஊஞ்சல் அருமை.

பாடலும்தான்.

வாழ்த்துக்கள்.

VELU.G said...

நல்லாயிருக்குங்க

Thamiz Priyan said...

ம்ம்ம்ம்.. ஆடட்டும்.. ஆடட்டும் ஊஞ்சல் ஒய்யாரமாய் ஆடட்டும்.

ரோகிணிசிவா said...

mm , en unjal aasaiya kilareeteenga , planning to hav one in near future ,,
same global furnitures ,poy

கோமதி அரசு said...

அழகான ஊஞ்சல்.

//ஊக்கம் கொண்ட மனிதரே
உயர்வு காண்பர் வாழ்வினில்//

கவிஞர் துரைசிங்கம் பாட்டு அருமை. குழந்தை பைரவி பாடலும் அருமை.

ஊக்கத்துடன் பாலக்காடு போய் ஊஞ்சல் வாங்கி வந்து ஆடம்மா மகிழ்ச்சியுடன் ஆடு.

முகுந்த்; Amma said...

அற்புதமா இருக்குங்க. வாழ்த்துக்கள். எனக்கும் கூட இங்க ஊஞ்சல் கட்டனும்னு ஆசைதான், என்ன பண்ண மர வீடு, ஊஞ்சல் வெயிட் தாங்காது.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

ஊஞ்சல்களை இப்போதெல்லாம் கிராமங்களில் கூட பார்க்க முடிவதில்லை. நல்லா இருக்கு

அன்புடன் அருணா said...

ம்ம்..எனக்கும் ஊஞ்சல் ஆசை உண்டு!இன்னும் தீரவில்லை!சூப்பரா இருக்கு உங்க ஊஞ்சல்!!

pudugaithendral said...

ஊஞ்சல் ஆசை இருப்பதால்தான் சிட் அவுட்டில் ஊஞ்சல் போடணும்னு திட்டம் போட்டு வெச்சிருக்கேன்.

அழகா இருக்கு ஊஞ்சல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சித்ரா :)

துளசி நீங்க சுத்தின சுத்துக்கு இளைச்சுப்
போயிருப்பீங்க நோ ப்ராப்ளம் :)

ஆதவன் நன்றி :)

முல்லை நன்றி :)

கோபி நன்றி :)

நன்றி ஆயில்யன் உங்க ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்..:)

வாங்க சின்னம்மிணி இந்த வயசுலயும் ஊஞ்சல் கிடைச்சா விடறதில்ல :)

அமைதிச்சாரல் தளம் தான் ..
நன்றிங்க.. :)

ஹூசைனம்மா நன்றி :)

சேட்டை .. ஆமாங்க யாராச்சும் லேசா ஆட்டிவிட்டா இன்னும் நல்லா இருக்கும்..:)

மங்கை நன்றி :)

வெங்கட் நன்றி :)

நன்றி அம்பிகா :)


உழவன் .. அந்த மரத்துல கட்டின ஊஞ்சல் எல்லாம் நான் ஆடியதில்லையே..

நாடோடி அப்படி என்ன சிறப்புன்னு எழுதுங்களேன்..

நித்திலம் நன்றிங்க.. :)

தெகா நன்றி :)

நன்றி ராமலக்‌ஷ்மி :)

சே.குமார் நன்றி :)

வேலு ஜீ நன்றி :)

நன்றி தமிழ்பிரியன் :)

ரோகிணி சீக்கிரம் நீங்களும் ஊஞ்சல்வாங்க
வாழ்த்துப்பா.. :)

கோமதிம்மா நன்றி..:)

முகுந்தம்மா அங்க தான் ஸ்டாண்ட் ஊஞ்சல் கிடைக்குமே வாங்கி ஆடுங்க.. :)

நசரேயன் நன்றி :)

புலவன் புலிகேசி நன்றி :)

அருணா வாங்களேன் தில்லிக்கு..
ஊஞ்சலாடும் ஆசையெல்லாம் தீருமா என்ன
நம்மை மீண்டும் குழந்தையாக்கும்
காலயந்திரம் அது :)

தென்றல் உங்கள் திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்ப்பா :)

ADHI VENKAT said...

படிக்கும் போதே ஊஞ்சல் ஆட வேண்டும் போல் உள்ளது.

எம்.ஏ.சுசீலா said...

ஊஞ்சல் அட்டகாசமாக இருக்கிறது முத்து.பேசாமல் நம் பதிவர் கூட்டத்தை ஊஞ்சலாடிக் கொண்டே வைத்துக் கொள்ளலாமா என்று ஆசையாக இருக்கிறது.