May 29, 2012

இறக்கை தொலைத்தது தேவதை

விரல்களுக்குள் அடங்கிவிடும்
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய் 
அர்த்தப்படுத்தியபின் 
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக 
மீதி இறக்கை விரித்து 
பறந்து மறைந்தது

ஆண்டாண்டுகளாய் 
உறங்கி 
விழித்தெழுந்து 
தானாய் பூத்தது தாமரை

உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை 
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை

5 comments:

ராமலக்ஷ்மி said...

/ஆண்டாண்டுகளாய்
உறங்கி
விழித்தெழுந்து
தானாய் பூத்தது தாமரை/

அழகு வரிகள்.

/உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை/

அதானே? சிறப்பான கவிதை முத்துலெட்சுமி!

கோபிநாத் said...

கடைசி வரிகள் சூப்பரு ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி :)

நன்றி கோபி :)

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அருமையாயிருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சாரல்..:)