இந்த முறை ரயில் வண்டியில் போன சமயமெல்லாம் சில வேடிக்கைகள் நடந்தது.
ஜனசதாப்தியில் போய்க்கிட்டிருந்தோம். ஈரோட்டில் ஒரு பெண் ஏறினாள். சின்னப்பெண் தான் காலேஜ் இப்பத்தான் படிக்கிதோ முடிச்சிருக்கோ தெரியல தனியாத்தான் ஏறினாள். ஏறியதும் என் சீட் நம்பர், இந்த விண்டோ சீட், என்று ஜன்னல் கிட்ட உட்கார்ந்திருந்தவங்களைக் கேட்டாள்..அவங்க நான் நல்லா ப் பார்த்து தானே வாங்கினேன்..என்றதும் ஏத்திவிட வந்தவங்க கிட்ட பாத்துக்கிறேன் போங்க என்றாள். அப்போதே பார்த்திருந்தால் அங்கேயே இறங்கி இருக்கலாம்.ரயில் கிளம்பி விட்டது .
ஒரு வேளை அடுத்த பெட்டியா இருக்குமோ என்ற வர்களிடம் இல்லையே அதான் போட்டிருக்கு வேணா டிடி ஆர் வந்தா கேக்கலாம் அது எப்படி அதே நம்பர் என்றபடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்கு உட்கார்ந்தாள்..பக்கத்தில் இருந்த இரு காலேஜ் பொண்ணுங்க தாங்க அதை என்ற படி வாங்கி டேட் பார்த்தால் அது அடுத்த மாதத்திற்கு அதே தேதியில் எடுக்கப்பட்ட டிக்கெட்.கொஞ்ச நேரம் கழித்து
டிடி ஆர் வந்தார் இது டிக்கெட் இல்லாமல் வந்த குத்தமா த்தான் எடுத்துப்போம்...ஃபைன் ஒரு 300 அப்புறம் திருப்பி டிக்கெட்டுக்கு பணம் வேணும் என்றார்.. அப்படி இல்லைன்னா கரூர் ல இறங்குங் க அடுத்த ரயிலில் போங்க என்றார்..அத்தனை செலவழிப்பதற்கு இறங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..
அப்புறம் தான் விஷயமே அந்தப் பொண்ணு ஏத்திவிட்ட சித்தி சித்தப்பாக்கு போனை போட்டு இப்படி இப்படி ன்னதும் அடுத்து கரூரில் இறங்கி நில்லு நான் வரேன்னு சொல்றார்..அய்யோ நீங்க வர வரை நான் சும்மா நிலையத்தில் இருக்கமுடியாது நான் போய்க்கிறேன்னு சொன்னா அவங்க அந்த பக்கத்துல ஒத்துக்கல போல டென்ஷன் ஏறுது அந்த பொண்ணுக்கு ...
கவலைப்பட வேண்டியது தான் ஆனா அந்த பொண்ணு தனியா அதும் கூட்டமில்லா ஒரு ரயில் நிலையத்தில் (கரூர் ல நிலையம் காலியாதான் கிடந்துச்சு) இருப்பதற்கும் அடுத்த ரயிலில் வீடு போவதற்கும் எது நல்லது என்று யோசிக்கல அவங்க வீட்டுல..ஏதோ சமாதானம் செய்து போனை ஆப் செய்திட்டாள். ஆனா அடுத்து போன் மேல போன் அங்கயே இருன்னு.
நான் அந்த பொண்ணைப்பார்த்து போக வேண்டிய இடத்துக்காரங்க கிட்ட இப்ப சொல்லாதீங்க கரூரில் இறங்கியதும் டிக்கெட் எடுத்துடுங்க அப்புறம் இந்த டிரயினில் வரேன்னு சொல்லுங்க இல்லாட்டி ஆளாளுக்கு குழப்புவாங்க ன்னு அட்வைஸ் பண்னினேன்..என்ன பண்ணாளோ..
அடுத்தது ராக்போர்ட் ல சென்னை வரோம். கீழ் பெர்த் எனக்கும் ( குழந்தையும் நானும் படுக்கனுமே ), மிடில் பொண்ணுக்கும் ,எதிர் திசையில் கீழ் பெர்த் அம்மாவுக்கும் இரண்டு மாதம் முன்னமே இது தான் வேணும்ன்னு வீட்டுக்காரர் பதிவு பண்ணியாச்சு..கரெக்டா ஒரு தாத்தா முட்டியில் ஆபரேசன் ஆகிருக்காம் வந்துட்டார். அம்மா சரி நான் வேணா மிடில் போறேன்னாங்க சரியா போச்சு..
அடுத்து ஒரு வயதான பாட்டிய கூட்டிட்டு ரெண்டுபேர் ஏறினாங்க..ஏறிட்டு அந்த தாத்தாவோட சீட்டை அவங்க சீட்டுங்கறாங்க..சரி அப்படியே இருந்தாலும் எங்க படுக்க வைப்பீங்க ஏற்கனவே ஒரு சீட் கொடுத்தாச்சே என்று கவலையோடு நான் கேட்டேன்.. பாத்துக்கலாங்க என்ற அந்த அம்மா ஒரு பெரிய மடக்கு மேஜை வேற கொண்டுவந்துருக்காங்க இத இப்படியே காலுக்கிடையில் போடலாம் என்கிறார்கள்..சரிதான் இன்னைக்கு நாம் தூங்கினா மாத்ரி தான்ன்னு நினைச்சேன்.
தாத்தாக்கோ கடுப்பு என் சீட் நான் போன மாசமே எடுத்தேன் என்கிறார். அந்த வயதான் பாட்டியோட வந்த அம்மாவின் கணவர் இதேதடா பிரச்சனை என்று ஆரம்பித்தார் நான் ஜனசதாப்தி கதையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் என்னைக்கு எடுத்திருக்கீங்க டிக்கெட் என்றேன்.. அவங்க கண்ணாடி போட்டு படிக்க வேண்டிய ஆள் போல கண்ணை சுருக்கி அதெல்லாம் சரியாத்தான் இருக்கு என்றார்கள்...எதுக்கும் குடுங்களேன் என்று பறிக்காத குறையாக வாங்கிப்பார்த்தால் அது அடுத்த நாளைக்கு உள்ள டிக்கெட்..கிளம்பறதுக்குள்ள இறங்குங்க அப்புறம் ஒரு 1000 ரூ செலவாகப்போது என்று இறக்கிவிட்டோம்.
என்ன சொல்ல இவர்களை எல்லாம்..ஜனசதாப்தி பெண்ணுக்கு அவங்க அப்பா ஆபிசில் ஒரு ஆள் மூலம் எடுத்துக்கொடுத்தாராம்..அப்பாவும் பாக்கல பிள்ளையும் பாக்கல..(.எடுக்க சொன்ன ஆளுக்கு ஒருவேளை அந்த பொண்ணோட அப்பா மேல எதாச்சும் கோவம் இருக்குமோ.?)
படிச்சவங்க டிக்கெட் எடுத்தவுடனே செக் செய்யாமல் அடுத்தவங்களை மிரட்டற மிரட்டல் இருக்கே... போனமுறை ஜனசதாப்தியில் ஒரு புது தம்பதி பொண்ணோட அப்பா அம்மா வை ஏத்திவிட வந்தாங்க.. சீட் நம்பர் 60 61 அழுத்தமா சொல்றாங்க...அந்த பொண்ணாவது பரவால்ல... அம்மா வந்தாங்க உட்கார்ந்து இருக்கறவங்கள நம்மளதுன்னு சொல்லி எழுந்திரிக்க சொல்லவேண்டியது தானே என்று கத்துராங்க.. என்னன்னா அந்த அம்மாக்கு 60 அந்த அய்யாக்கு 61.... வயசுங்க..சீட் நம்பர் எது வயசு எதுன்னு தெரியாம வந்துடறாங்க..
22 comments:
இதுல ஏதும் உள்குத்து இல்லியே! பிளைட்ட விட்ட ராஸ்கோல்லாம் நாட்டுல பல பேர் திரியுதுங்க:-))
ஒருவாட்டி இப்படித்தான் நான் மாட்டினேன். 25ம் தேதி நைட் எங்க ஊர்லேந்து சென்னை வர்றதுக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். ராத்திரி 12:30 க்கு ட்ரெய்ன். 11:30 க்கு அலாரம் வச்சி எழுந்து 12 மணிக்கெல்லாம் ஆட்டோ வெச்சி ஸ்டேஷன் போனோம். போய் பாத்தா ரிசர்வேஷன் சார்ட்ல எங்க பேர் இல்ல. செம டென்ஷன் ஆகி டிக்கெட் கவுண்ட்டர்ல கேட்டா அந்த கிளர்க் டிக்கெட் வாங்கி பாத்துட்டு 'டேட் டைம் எல்லாம் சரியாத்தான் இருக்கு. கண்டிப்பா சார்ட்ல இருக்கணுமே... கொஞ்சம் இருங்க...'-னுட்டு டிக்கெட் எடுக்க வந்தவங்களையெல்லாம் வெயிட் பண்ண சொல்லிட்டு என் டிக்கெட்ட எடுத்துகிட்டு உள்ள யார் யார் கிட்டயோ அலஞ்சார். கொஞ்ச நேரத்துல திரும்பி வந்து என்னன்னு தெரியல சார். எதுக்கும் நீங்க உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பார், அவர்கிட்டயே போய் கேளுங்கன்னு சொல்லிட்டார். என்னங்க சரிவீஸ் பண்றீங்கன்னு அவரை கொஞ்சம் திட்டிட்டு ஸ்டேஷன் மாஸ்டர பாக்கப் போனோன். கூடவே என்னோட தங்கச்சிங்க ரெண்டு பேரும் தூக்கக் கலக்கத்துல பரிதாபமா வர்றாங்க.
ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட்ட வாங்கி பாத்தார். அவருக்கும் ஒன்னும் புரியல. வேற எதோ ஸ்டேஷனுக்கெல்லம் போன் பண்ணி சார்ட் செக் பண்ண சொல்லி பாத்தார். ஒன்னும் வேலைக்கு ஆகல. ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட நான் ஆர்கியூ பண்ணிட்டு இருந்தப்போ பக்கத்துல இருந்த ஒரு ஊழியர் டிக்கெட்ட வாங்கி பாத்துட்டு சொன்னார்... 'சார் இது நேத்தைய டிக்கேட்..!' எனக்கு ஒன்னுமே புரியல. இன்னிக்குதானே 25. 25 தானே நம்ம கஸின் கல்யாணம். கலியாணம் முடிஞ்சி நைட் திரும்பறதுக்கு தான புக் பெண்ணினோம்-னு என் மனசுக்குள்ள கன்ஃபார்ம் பண்ணிகிட்டு 'சார் 25ம் தேதிக்குதான் புக் பண்ணியிருக்கேன். இன்னிக்கு தேதி 25 தானே...' ன்னு சொல்லிகிட்டே என் வாட்ச்-ல தேதி கட்றேன் அவருக்கு. கூடவே நானும் பாக்கறேன் தேதி 26 ன்னு இருக்கு! 'இது எப்படா மாறிச்சி நமக்குத் தெரியாம'-ன்னு செம டென்ஷன் ஆகிட்டேன். நீங்க போக வேண்டிய ட்ரெய்ன் நேத்து விடியற்காலம் அதாவது 25ம் தேதி 12:30 க்கு போயச்சுன்னு பொறுமையா புரியவச்சார்!
டென்ஷன்ல முறைச்ச தங்கச்சிங்க கிட்ட 'சரி சரி வாங்க... வாழ்க்கைல இதெல்லாம் ஒரு பிரச்சணையா... இதெல்லாம் ரொம்ப சகஜம். நாலைக்கு காலைல போய்க்கலாம் வங்க'-னு சமாதானப்படுத்தி வீட்டுக்கு இன்னொரு ஆட்டோ புடிச்சேன். காலைல திரும்ப ஸ்டேஷன் வர்றதுக்கு இன்னோர் ஆட்டோ புடிக்கறப்போ தோணிச்சி. பேசாம ஆட்டோலயே சென்னைக்கு போயிருக்கலாமோன்னு.
அதெல்லாம் கூட பரவாயில்லை. ஸ்டேஷன் உள்ளேயிருந்து வர்றப்போ அந்த டிக்கெட் கவுண்டர் கிளர்க் கண்ணுல படாம கேஷூவல வெளில வர்றதுக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டேன்!
நைட் ட்ரெய்ன் கு புக் பண்ற மக்களே... இந்த 12 மணிக்கு முன்ன பின்ன புக் பண்றப்பொ கொஞ்சம் ஜாக்கிறதையா இருங்க!
சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுல மன்னர் நீங்க..அபி அப்பா.இருந்தாலும் உங்களை இப்படி எல்லாம் திட்டிக்கக்கூடாது.
ஆகா அருள் இதென்னாது இது...எல்லாரும் இன்னிக்கு ஒரே உண்மை விளம்பியா ஆகிட்டீங்க..
நல்ல காமெடிப்பா..( எங்களுக்கு ..உங்களுக்கு இல்ல)
பொதுவாக ரயில் பயணங்களில் பலதரப்பட்ட பழக்கவழக்கங்கள், பேச்சுவழக்குள்ள மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மறக்க முடியாத அனுபவங்களும் நிறைய கிடைக்கும். நீங்கள் சொல்லியிருப்பது முன்பதிவு செஇயப்பட்ட பெட்டியில் நடந்த கூத்துக்கள். இதைவிட முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நிறைய பார்க்க முடியும். இடம் பிடிக்கும்போது முட்டிமோதி, திட்டிக்கொண்டவர்கள், தூக்கம் கண்ணை இறுக்கும்போது தாங்களாகவே (வேறு வழியில்லாமல்
) சமாதானமாகி "அட, சரியாச் சொன்னீங்க போங்க!" "இதுகூட பரவாயில்லை, ஒருதடவ..." என மிகுந்த நட்போடும் உரிமையோடும் பேசிக்கொள்வதும், விடியும்வேளையில் மனதில் கணத்தோடு விடைதருவதும் கூட உண்டு.
னேண்க்கள் ஒரு இள வயதுப்பெண்ணைப் பற்றிச் சொல்லி இருக்கிறேர்கள். எனது அனுபவத்தில் ஒரு கைக்குழந்தையோடு சென்னையில் ரயிலேறிய பெண், மிகவும் தன்னம்பிக்கையோடும், நம்பிக்கையோடும் அனைவரோடும் பழகியதும், அந்த பெட்டியில் அமர்ந்துள்ள அனைவருமே அப்பெண்ணுக்கு ஆதரவாக இருந்து குழந்தைக்கு தொட்டில் கட்டுவதிலிருந்து, புட்டி பால் குடுப்பதும், விளையாட்டு காட்டுவதும், அவரது உறவினர்களுக்கு தகவல் பறிமாற செல்பேசியை இரவல் கொடுப்பதும் என ஒரு திடீர் சகோதரியாக, மகளாகவே பாவித்து அன்பு மழை பொழிந்த சம்பவமும் உண்டு. நாம் அன்போடு பார்த்தால் பிரதிபலிப்பும் அன்பாகத்தான் இருக்க முடியும்.
கடைசி நிகழ்ச்சி நல்ல நகைச்சுவைக்கா. நான் அமெரிக்கால இருக்கும்போது நயாகரா நீர்வீழ்ச்சிக்கு போறதுக்கு தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் ஒரு ஆறு மக்களுக்கு முன்பதிவு செஞ்சு போனா அது முந்துன நாளுக்குள்ள பயணச்சீட்டு... நல்லவேளை நான் அந்தக் கூட்டத்துல இல்ல :))
அதே மாதிரி போன வாரம் ப்ராஜக்ட் பார்டின்னு ஒரு திரையறங்குல 20 பேருக்கு சீட்டு எடுத்திருந்தாங்க. அதுவும் முந்தின தினச் சீட்டுங்றதால ஒரு 2800 ருபாய் கம்பெனிக்கு இழப்பு... இந்த குழுவுல நானும் இருந்தேன் :(((
//நைட் ட்ரெய்ன் கு புக் பண்ற மக்களே... இந்த 12 மணிக்கு முன்ன பின்ன புக் பண்றப்பொ கொஞ்சம் ஜாக்கிறதையா இருங்க!//
இந்த அனுபவம் எனக்கும் உண்டு!!
இது எல்லாம் சரியா முன்னாடியே புக் பண்ணி போற ஆளுங்களுக்கு... நமக்கு எல்லாம் கடைசி நிமிடம் தான்...
டிரெய்ன் கூட பெரும்பாலும் தட்கால் தான்.... ஆனா இந்த சீட் நம்பர் பிரச்சனை பெரும் பிரச்சனை....
நீங்க ரெயில் டிக்கெட்டைச் சொல்றீங்க. இப்படித்தான் நேரக்குழப்பத்துலே 12மணி
தாண்டுனதும் இப்படியெல்லாம் ஆயிருது. அதுக்குத்தானே ரெயில்வே டைம்னு
சொல்றது:-)
\\முத்துலெட்சுமி said...
சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுல மன்னர் நீங்க..அபி அப்பா.இருந்தாலும் உங்களை இப்படி எல்லாம் திட்டிக்கக்கூடாது. \\
ஆஹா....அக்கா உங்களுக்கு தெரியுமா? அந்த விஷயம்...எனக்கு இங்க வந்த பிறகு தம்பி சொல்லி தான் தெரியும் ;)))
வத்திராய்ப்பூ ரொம்ப நாள் கழிச்சு இந்த் பக்கம்....
நீங்க சொல்றது சரிதான் ...ஏறின உடன் பெட்டி வைக்கற போட்டியில் இடம் பிடிக்கற போட்டியில் முறைத்துக்கொண்டவர்கள் பின்னால் அட்ரஸ் மாத்திக்கொள்வது நடக்கும்.
பயணங்கள் எப்போதும் சுவாரசியமானது.
அடப்பாவமே ஜி !..
கம்பெனிக்கு இழப்பு போனா போது..படம் பாக்கப்போறோம்னு எல்லாம் பந்தாவா கிளம்பி இருப்பீங்களே எத்தனை பேர் கிட்ட சொல்லி இருப்பீங்க..
குட்டிபிசாசு said...
//நைட் ட்ரெய்ன் கு புக் பண்ற மக்களே... இந்த 12 மணிக்கு முன்ன பின்ன புக் பண்றப்பொ கொஞ்சம் ஜாக்கிறதையா இருங்க!//
இந்த அனுபவம் எனக்கும் உண்டு!! //
குட்டிப்பிசாசு...பிசாசுக்கும் இந்த அனுபவம் இருக்கா :)
ராத்திரி 12 மணிக்கு தானே பிசாசு வரும்.ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்.
ஆகா நாகைப்புலியே நீங்க அபி அப்பாவின் கூட்டு என்பதை நிரூபிக்கிறீங்களே கொஞ்சம் பொறுப்பா இருங்க ..முன்னாடி யே ப்ளான் செய்யாத எதுவும் இன்னமும் ப்ராப்ளம் தரக்கூடியது..உங்களுக்கும் டென்சன் வீட்டுல இருக்கறவங்களுக்கும் டென்சன்.
ரெயில்வே டைம் ..ம்..சரிதான் துளசி..ஆனா பாருங்க கணக்குல என்னைப்போல மத்தவங்களும் கொஞ்சம் வீக்கா இருந்தா எந்த டைம்ன்னாலும் சரி அவங்க டைம் நல்லா இருந்தா ஒழுங்கா ஏறி ஒழுங்கா இறங்குவாங்க.
முத்துலெட்சுமியுடைய பதிவ படிக்க வந்தா இங்க அருள்குமார், கவுதமன் ஆளாளுக்கு பின்னூட்டம் பதிவு அளவுல எழுதியிருக்காங்க. இது திரீ-இன் - ஒன் பதிவு போல. நல்ல அனுபவம். எனக்கு ரெயிலில் போக ரொம்ப ஆசை. அதிகம் ரெயிலில் போனதே இல்லை. ஊட்டி ரெயிலுக்கு தனி மவுசு, அதை விட்டுட கூடாதுன்னு ஏறினால், என் நேரம் அதுவும் ஒரு விபத்தின் காரணமாக தடை. பயணசீட்டு எடுத்து உட்கார்ந்து 1 மணி நேரம் காத்திருந்தும் ம்ஹும் இன்று ரெயில் இல்லைன்னு சொல்லிட்டாங்க ;-( என் ராசியே இப்படிதான்.
அதிகமாக பயணம் செய்ய வேண்டிய வேலைகளைக் கொண்ட நிறுவனங்கள் (நான் வேலை செய்யும் நிறுவனம் உட்பட) தேதி நேரம் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டிய இந்த விஷயத்தைப் பல முறை சொல்லுவார்கள். எதற்காக இப்படிச் சொல்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால் இதையும் மீறி விமானங்களை விட்டவர்களைப் பார்க்கும் பொழுதுதான் அவர்கள் அப்படி படித்து படித்துச் சொல்லும் காரணம் புரிந்தது. இப்போ இங்க வேற இம்புட்டு பேரு!
கோபி ஆகா உங்களுக்கு அடுத்தாள் சொல்லித்தான் தெரியுமா? வர வர அபி அப்பா வுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுவாங்க போலயே...
ஆமா ஜெஸிலா இதுல இரண்டு மூன்று பதிவுகள் பின்னூட்டத்திலேயே வந்துடுச்சு...:)
நீங்க ரயிலிலேயே போனதில்லயா..நாங்க ரெண்டு நாள் போவோமே...ரொம்ப சுவாரசியமா இருக்கும்..பிரண்டு பிடிச்சு பேசிக்கிட்டு ஜாலியா...
அடுத்த முறை இந்தியா வரும்போது டெல்லிக்கு ராஜ்தானியில் வாங்க..
ஆமா கொத்ஸ்..உண்மைதான்..கம்பெனிகளில் டிக்கெட் எடுத்துக்கொடுப்பதை கடமையாக செய்திருந்தால் என்ன செய்வது ...அப்புறம் எல்லா வேலையும் கெட்டுப்போகும்..
நாங்க ப்ளான் 3 மாசத்துக்கு முன்னால போட்டு 2 மாசத்துக்கு முன்னால டிக்கெட்ட் பதிவு செய்து...ஒருமாசம் முன்னால இருந்து பேக் செய்து ஓவர் பில்டப்பா இருக்கும் ஊருக்கு போறதுன்னா...
//வத்திராய்ப்பூ ரொம்ப நாள் கழிச்சு இந்த் பக்கம்....//
அப்படித்தான்... இது குறிஞ்சிப்பூ மாதிரி... இனி த்னந்தோறும் பூக்கும். விசாரிப்புக்கு நன்றி.
//முத்துலெட்சுமியுடைய பதிவ படிக்க வந்தா இங்க அருள்குமார், கவுதமன் ஆளாளுக்கு பின்னூட்டம் பதிவு அளவுல எழுதியிருக்காங்க. இது திரீ-இன் - ஒன் பதிவு போல.//
இங்கு நான் கவிதை எழுதவில்லை.. முத்துலட்சுமி தனது அனுபவத்தை சொல்லி இருக்காங்க... நானும் என்னோட பங்குக்கு கொட்டி தீர்த்துட்டேன்! எஞ்ஜாய் பண்ணுங்க!
Post a Comment