July 21, 2007

தில்லியின் கம்பீரமான கோட்டைகள்

தில்லியென்றவுடன் எல்லாருக்கும் செங்கோட்டை நினைவுக்கு வரலாம். பழைய கோட்டையை உங்களுக்கு தெரியுமா இதன் பெயரே பழைய கோட்டை தான். புராண கிலா. இது தில்லி மதுரா ரோட்டில் பிரகதி மைதான் அருகில் இருக்கிறது.


மகாபாரத்ததில் வரும் இந்திரப்ரஸ்ததிற்கும் இந்த இடத்திற்கும் சம்பதம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.யமுனையின் கரையில் இருக்கிறது. அருகிலேயே தில்லியின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையும் இருக்கிறது.




ஷெர்ஷா சூரி என்பவர் இதனை கட்ட ஆரம்பித்து ஹுமாயூனால் தொடர்ந்து கட்டப்பட்டது. இதனுள் இருக்கும் ஷெர் மண்டல் என்னும் சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ஹுமாயூனால் நூலகமாக உபயோகிக்கப்பட்டதாகவும் , நூலகத்தில் இருந்து படிகளில் இறங்கும் போது தான் ஹுமாயூன் விழுந்து இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.
ஷெர்-மண்டல்


வடக்கு தெற்கு மற்றும் மேற்கில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் வடக்கு வாயில் தலாகி தர்வாசா (forbidden gate) என்று அழைக்கப்படுகிறது காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதன் பாதி உடைந்த கோட்டை சாலையின் மறுபக்கத்தில் இருக்கிறது . உடைந்து போனாலும் கம்பீரமாக நிற்கும் இந்த கோட்டை இரவின் வெளிச்சத்தில் நிலவும் மற்றும் focus ligt காரணமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.



ஒளிஒலிக்காட்சி இரவில் நடைபெறுகிறது. மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் ஹெரிட்டேஜ் வாக் என்று இருக்கிறது.தொடர்புக்கு,
INTACH DELHI CHAPTERThe Indian National Trust For Art & Cultural heritage71, Lodhi Estate, New Delhi - 110003Ph:24641304, 24692774, 24632269Email: intachdelhi@rediffmail.com



கோட்டையை ஒட்டி புல்வெளியும் மரங்கள் அடர்ந்த பகுதியும் நேரம் போக்க நல்ல இடம் . தில்லியின் எல்லாப் பூங்காவைப்போன்றே இங்கேயும் காதலர்களின் கொட்டம் அதிகம் தான். இங்கே ஒரு நீர்நிலையில் போட்டிங் போகும் வசதி இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும்.


ஹூமாயூன் டூம். இதுவும் பார்க்கவேண்டிய ஒரு இடம் தான் இதன் கட்டுமானம் உங்களுக்கு ஆக்ராக் கோட்டையைப்போல இருக்கிறதா? இது ஹுமாயூனின் முதல் மனைவி ஹாஜி பேகம் அவருக்காகக் கட்டியது.

17 comments:

அபி அப்பா said...

எல்லாமே சூப்பர் படங்கள்!

ஜே கே | J K said...

படங்கள் + விளக்கம் அருமை.

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சில தினங்களுக்கு முன் இங்கே தொலைக்காட்சியில் பல இந்தியக் கோட்டைகள்,அரண்மனைகள் பார்த்து வியந்தேன்.அதில் செங்கோட்டை பற்றி மவுன்பேட்டன் பிரபுவின் பேத்தி
இந்தியா(ஆம் அவர் பெயர்)கூறியது. தன் பாட்டி கூறுவாராம். வரவேற்பறையில் இருந்து சாப்பாட்டறை செல்ல 10 நிமிட நடையாம்.பிரமாண்டமே!!
உங்கள் படங்கள் நன்று

பங்காளி... said...

பேசாம...இந்த மாதிரியான பதிவுகளுக்காக தனியே புதுசா ஒரு வலைப்பதிவு துவங்கலாம்....

எனக்கு தெரிஞ்சு தமிழ்ல பயணங்கள் தொடர்பா வலைப்பதிவு ஏதும் இருக்கறதா தெரியல.....

யோசிங்க முத்துலட்சுமி...

குசும்பன் said...

கடைசியில் இருக்கும் ஹூமாயின் டூம்மை பார்த்து இருக்கிறேன் மற்ற இரண்டையும் பார்த்தது இல்லை, நன்றாக இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபிஅப்பா...
படங்கள் நான் எடுத்தபோது குடும்பத்தோடு மட்டுமே எடுத்ததால் இதுகூகிள் துணைப்படங்கள்.

------

ஜேகே. நன்றி ...இன்னும் கூட எழுதி இருக்கலாம். (சின்னப்பையனின் அட்டகாசம் ,சுருக்கமாகிவிட்டது)
-------
யோகன் கொஞ்சநாளாக இந்தியா அதாங்க அந்த பெண்ணைச் சொன்னேன் எங்கும் அந்த பெண் பேச்சாகவே இருக்கு.. செங்கோட்டையின் 80% இடம் பார்வைக்கு இல்லை..அது இன்னமும் மிலிட்டரி மற்றும் அதன் உயரதிகாரிகளின் வசமே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி நல்ல யோசனை தான் ...ஆனால் அதில் போடுவதற்காக அதிக பயணம் செய்ய வேண்டி வருமோ... முயற்சிக்கிறேன்..
--------

குசும்பன்...பழைய கோட்டை அதிகம்பேர் பார்ப்பதில்லை , மற்றூம் இன்னும் சில இடங்கள் சூரஜ் குண்ட் போன்ற இடங்கள் யாரும் அதிகம் முக்கியத்துவம் குடுக்காத ஆனால் அற்புதமான இடங்கள்..ரங்தே பஸந்தி , ஃபனா போன்ற படங்களில் தில்லியை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

பங்காளி... said...

//பங்காளி நல்ல யோசனை தான் ...ஆனால் அதில் போடுவதற்காக அதிக பயணம் செய்ய வேண்டி வருமோ... முயற்சிக்கிறேன்..//

ஆஹா....உங்க வீட்டுக்காரருக்கு ஆப்பு வச்சிட்டனா....நாலு பேருக்கு தகவல் தெரியனும்னா ஒருத்தர் கஷ்டப்படலாம்...ஹி..ஹி...

மங்கை said...

அப்ப இன்னொரு புது பிளாக் ரெடி ஆயிடும் ஒரு வாரத்துல..வாழ்த்துக்கள்
கலக்குங்க..கலக்குங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புரிஞ்சிடிச்சா பங்காளி ...ம்.
போறது பெரிசில்ல விசயத்தை அப்படியே நோட் பண்ணிடு வேற வரனும் இதுக்காக..துளசி மாதிரி எனக்குநியாபக சக்தி வேற இல்ல.. :)

_____

மங்கை அப்ப என்ன ஆரம்பிச்சிடுன்னு சொல்லறீங்களா நீங்களும். :)

SurveySan said...

Amazing pictures.


delhi and surrounding is in my list of must-see for a long time.
have seen Taj and surroundings, but only did a 'been there' kind of trip.

need to spend time and really sync in.

துளசி கோபால் said...

அய்யோ 'ஹுமாயூன் டூம்ப்' மறக்கற விஷயமா அது?

தில்லியில் முதல்முதலா கால் குத்திட்டு, ஊர்சுத்திப்ப்பார்க்கக் கிளம்பிட்டு, கடவுளில் இருந்து
ஆரம்பிக்கலாமுன்னு 'லக்ஷ்மிநாராயண் மந்திர் சலோ'ன்னு சொன்னதும் எங்களை நேராக் கொண்டு
விட்டது இந்த 'ஹுமாயூன் டூம்ப்'பில் தாங்க (-:

கோபிநாத் said...

தகவலுக்கு நன்றிக்கா ;)))

கோபிநாத் said...

\\மங்கை said...
அப்ப இன்னொரு புது பிளாக் ரெடி ஆயிடும் ஒரு வாரத்துல..வாழ்த்துக்கள்
கலக்குங்க..கலக்குங்க\\

முத்துலெட்சுமி said...
\\மங்கை அப்ப என்ன ஆரம்பிச்சிடுன்னு சொல்லறீங்களா நீங்களும். :)\\

ம்ம்ம்.....அப்ப புது பிளாக் ஒன்னு ரெடி ஆகிட்டுயிருக்கு....சரி....சரி....நடத்துங்க ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் தில்லியிலேயே இருக்கும் நானே இன்ன்னும் இதன் அழகை முழுதாக பார்க்க முடியவில்லை..அத்தனை இடங்கள் இருக்கின்றன.

--------
துளசி ஒரு தடவை என்பெற்றோர் பஸ்ஸில் ஹுமாயூன் டூம் போய் இருந்தார்கள் பார்த்தால் ரோட்டிலிருந்தே தெரிகிறது அருகில் தான் இருக்கும் என்று நினத்திருக்கிறார்கள். கோயிலை வலம் வந்த மாதிரி அதன் வாயிலைத்தேடி அலைந்திருக்கிறார்கள். மறக்கவேமுடியாது அவர்களால். அது போல இருட்டு நேரத்தில் புராணக்கிலாவில் படிக்கட்டில் டார்ச் வெளிச்சத்தில் ஏறியபடி சென்றதையும் அவர்கள் சொல்லிக்க்கொண்டிருப்பார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா கோபிநாத் ஒவ்வொருத்தர் இத்தனை ப்ளாக் வச்சிக்கிட்டு எப்படி மெயிண்டென் பண்ணறாங்கன்னு நினைப்பதுண்டு இப்ப நானே தனித்தனியா ஆரம்பிக்கறேன் சொலறேன் பாருங்க. நேரம் தான்.

siva gnanamji(#18100882083107547329) said...

த்மிழ்நாட்டு கோட்டைகள் பற்றி
விட்டல்ராவ் ஆய்வு செய்வதாக(பதிவிலா?) படித்த நினைவு...
படமாக்க சில காலம் பிடிக்கும்
ஆயினும் நல்ல முயற்சியாக இருக்கும்