July 27, 2007

நினைவுகளின் நிறங்கள்

கோலத்தின் புள்ளிகளைச் சுற்றியோடும் இழைகளென
ஆரம்பமும் முடிவும் காணமுடியாத படி
உன் நினைவுகள் பின்னி நிற்கின்றன
அழிய அழிய புள்ளிகள்
புது மொட்டுக்களென விரிகின்றன
இளங்கொடியைப்போல கோல இழைகள்
நிமிடத்தில் வளர்ந்து
புள்ளிகளுக்கு இடையில் நிரப்பிவிடுகிறது
நினைவுகளுக்கு நிறமுண்டா ?
என் வெள்ளைநிறத்து நினைவுகள்
எப்போதும் மழையோடே வருகிறது
பச்சை நிறத்து நினைவுகள்
சிதறிய வேப்பிலைகளின் வாசத்தோடே வருகிறது
சில சமயம் மரத்தின் வேர் முண்டில்
அமர்ந்திருக்கும் காட்சி கோலமாய் வாசலில்
அந்த சாம்பல் நிறநினைவுகள்
யாரோ இரண்டு வரிசைக்கப்பால் பிடிக்கும்
வெண்சுருட்டின் புகையோடு வருகிறது
இருட்டு வெளியில்
ஒளிகற்றை ஒன்று
சின்னதாய் தொடங்கி பெரியதாய் விரிந்து
வெள்ளைத்திரையில் விழும் காட்சியில்
அதோ அவளும் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள்

15 comments:

கோபிநாத் said...

\\"நினைவுகளின் நிறங்கள்"\\

கோலங்களில் ஆரம்பித்து அழகாக நிறங்களில் இணைத்துள்ளிர்கள்.

கடைசி வரியும் முதல் வரியும் அருமையாக இணைந்துள்ளது.
ஒரு சூழச்சி போல இருக்கு.

வாழ்த்துக்கா ;-))

கண்மணி/kanmani said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மக்கா இந்த அக்கா மண்டைக்கு ஏறலை.முத்துலட்சுமி கோலம் பத்தி சொல்றாங்களா இல்லை சமையல் குறிப்பா?

ச்சும்மா நல்லா இருக்கு[ம்] இன்னும் கொஞ்சம் கிராப் பண்ணா.

கண்மணி/kanmani said...

கோபி நீ கில்லாடி
அக்கா கவுஜ நல்லாருக்குன்னு சொல்லனும்.முதல் வரி கடைசி வரின்னுட்டியே....ஹாஹா..மத்தது?;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி முதல் வரியையும் கடைசி வரியையும் சூழ்ச்சியால் இணைச்சிருக்கேனா...அய்யகோ பழி போடலாமா இப்படி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி ஏங்க இதுல சமையல்குறீப்பு க்கான எதாச்சும் ஒன்னு கூட இல்லையே ஆனா ஏன் சமையல்குறிப்பான்னு கேட்டீங்க..

கண்மணி/kanmani said...

//வேப்பிலைகளின் வாசத்தோடே வருகிறது//

கறி வேப்பிலைன்னு நெனச்சிட்டேன்..ஹி..ஹி..சாரி

காயத்ரி சித்தார்த் said...

//கோலத்தின் புள்ளிகளைச் சுற்றியோடும் இழைகளென
ஆரம்பமும் முடிவும் காணமுடியாத படி
உன் நினைவுகள் பின்னி நிற்கின்றன,.
//

நல்லாருக்கு அக்கா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி கறிவேப்பிலைன்னு நினைச்சீங்களா ம்...சரிதான்..
-------
கவிதாயினி காயத்ரி வந்து ந்ல்லாருக்குன்னா அப்புறம் என்ன..
கவலை. :)
நன்றி காயத்ரி.

காட்டாறு said...

யக்கோவ்... இது மங்கையக்காவின் memory trigger பதிவின் மயக்கமா? சும்மா சுருட்டு வாசனையையும் விட்டுவைக்கல. ;-)
கலக்குங்க ராசாத்தீ.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா கரெக்கிட்டா கண்டுபிடிச்சிட்டியே காட்டாறு..
மங்கையின் பதிவுதாக்கம் தான் இந்த கவிதை.

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை முத்து லக்ஷ்மி

Ayyanar Viswanath said...

good one ..muthu lakshmi!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன அய்யனார் இப்ப தான் சாவகாசமா படிக்கிறீங்களா? நீங்கள்ளா ஒரு தடவை நல்லாருக்குன்னு சொன்னாலே பெரிய விசயம். அது என்ன ஆங்கிலத்தில் ஒருமுறை தமிழில் ஒருமுறை ரசிச்சீங்களா?

Jazeela said...

நல்ல கவிதை முத்துலெட்சுமி. படிக்கும் போதே காட்சிகளை நிரப்ப வைத்தது. இந்த கவிதையை நீங்க நினைச்சா எளிதில் காட்சியாக்கி பொருத்தி பார்க்கலாமே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஜெஸிலா.