1.நிறைய குறும்படங்களைப்பாருங்கள். டாக்குமெண்டரிகள் திரையிடப்படும் போது பெரிய திரையில் பாருங்கள். இல்லையெனில் வீடியோ கிடைத்தால் பாருங்கள்.குறும்படங்களின் வடிவங்கள் எப்படிப்பட்டது என்கிற மற்றும் அதன் எத்தனையோ வகை இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..
2.தொழிட்நுட்பத்தில் தேர்ந்திடப்பழகுங்கள். கடனோ உடனோ வாங்கி ஒரு கேமரா ஏற்பாடு செய்து அதன் தொழிட்நுட்பம் பழகுங்கள். எடிட்டிங் மற்றும் ஒலி அமைப்புகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று அதன் அதன் தொழிட்நுட்பத்தை அறிந்துகொள்ளுங்கள்.
3. ஒரு கருப்பொருளை எதைப்பற்றி எடுக்கபோகிறீர்கள் என்று முடிவெடுத்துவையுங்கள்.அது எடுக்க எளிதாக , பிடித்தமான ஒன்றாக இருக்கட்டும்.உங்கள் பகுதியில் இருப்பவரைப்பற்றியோ அல்லது வீட்டுக்கருகில் நடக்கும் நிகழ்ச்சியோ என்றால் அதிகம் பணச்செலவில்லாமல் மற்றும் அதிக நேரம் செலவு செய்து நிறைய முயற்சிக்கமுடியும்.
4. எடுத்துக்கொண்ட கருப்பொருளில் நிறைய ஆய்வு செய்து கொள்ளுங்கள்.இணையம் மற்றும் புத்தகங்களில் அதனைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதையும் உண்மையான விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
5 .ஒரு மொத்தமான வடிவமைப்பை வரைந்து கொள்ளுங்கள். கண்மூடி யோசியுங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
6.என்ன என்ன தேவை என்பதை குறித்துக்கொள்ளுங்கள்..கேமிரா மற்றும் உபகரணங்கள், யாரை வைத்து எடுக்கப்போகிறோம் அவர்கள் நேரம் மற்றும் அனுமதி என்ற திட்டமிடல்
7.எடுப்பதற்கான பணத்தேவை களை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
8.படமெடுக்கத்தொடங்குங்கள். எடுக்கப்போவதை பற்றி பேசிக்கொண்டே இருக்காதீர்கள் , இந்த விசயம்தான் கனவுடன் நாளைய நம்பிக்கையோடிருக்கும் இயக்குனர்களுக்கும் உண்மையான இயக்குனர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.
9. படமெடுத்தபின் உள்ள வேலைகள். எந்த காட்சிகள் எப்படி எடிட் செய்யப்படவேண்டும் எது எந்த இடத்தில் வரவேண்டும்..
என்கிற எழுதியதோ வரைந்ததோ ஒரு குறிப்பு.. தயார் செய்தால் வெட்டி ஒட்ட வசதியாக இருக்கும்..நேரம் மிச்சமாகும். பின்னர் முடிவான பார்வைக்கு தயார் செய்யவும்.
10. காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான ஒன்று. ..சரியான இடத்தில் சரியான நபர்களுக்கு காட்சிப்படுத்துதல் குறும்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
-----------
நான் என் சமீபத்திய இடுகையிலிட்ட
குறும்படம் (ஒரு நாளின் துவக்கம்) ஒரு இஸ்திரி வாலாவின் குடும்பம் எப்படி ஒரு நாள் முழுதும் வீட்டுக்குவெளியே இருக்கிறார்கள் ..வீடு வீட்டுக்கு வெளியே என்பதாக திட்டமிட்டேன்..ஆனால் அதற்கு நான் அவர்களின் வீட்டிற்கு இரு முறை போகவேண்டி இருந்தது..பின்னால் அது வசதிப்படாததால் எழுத்து வடிவத்திலேயே ஒதுக்கப்பட்டது.
முதலிலேயே அவர்கள் இப்படி ஒரு வீடியோ எடுக்க அனுமதிக்க யோசித்தனர். அதுவும் அவர்களைப்போன்றோருக்கு இது எதற்காக இதனால் என்ன ஆகும் என்றெல்லாம் கூட மனதில் கேள்வி எழுந்திருக்கும்.
பின்னர் அவர்கள் வருகிற நேரம் மற்றும் வேலை யின் தன்மையும் கூட முதல் நாளே பேசி வைத்துக்கொண்டேன். அப்படி இருந்தும் நான் படமெடுக்க சென்ற போது அவர்கள் கணவர் வேறுவேலையாக் போயிருந்தார். எனவே மனைவி மகன் மகள் தான் வீடியோவில் இருந்தனர்.
முதல் முதலாக எடுப்பதால் யாரும் நம்மை பார்த்து ஏன் என்ன செய்கிறாய் என்று கேட்டுவிடுவார்களோ அவர்க்ளுகு என்ன பதில் சொல்வது என்ற கேள்விகளால் ஒரு வித தயக்கம். மனதில் எதோ தப்பு செய்வது போல் பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் ஒரு குறுகுறுப்பு.
அதன் படத்தினை விடியோக்கேமிராவிலேயே எடிட் செய்து பின்னர் பிக்சர் பேக்கேஜ் மூலமாக அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டவுடன்.
அதற்கான பாடல் புல்லாங்குழலாக இருக்கவேண்டுமென்பதால் தேடி எடுத்த பாடலை கணினியில் பாடவிட்டு...எம்பித்ரி ரெக்கார்டர் மூலம் ரெக்கார்ட் செய்து அதனை விண்டோஸ் மூவி மேக்கரில் ஆடியோ விற்கு இணைத்தேன்.
பின்னர் டைட்டில் மற்றும் நன்றீ யும் மூவி மேக்கரில் தயாரித்து யூட்யூப் அக்கௌண்டில் வலையேற்றி அதனை எம்பெட் செய்து போட்டாயிற்று..
பார்க்கத்தான் வலைப்பதிவர் நட்பு வட்டம் இருக்கிறதே..
கருப்பொருளின் சாதாணத்தன்மை பற்றி ஒருவித கருத்து இருந்தாலும் ஒருவரை போய் சம்மதிக்கவைத்து செய்வது என்பது நடைமுறையில் கொஞ்சம் எளிதானது அல்ல.. நடிகர்களை வைத்து செய்வதானால் அதற்கு போதுமான பயிற்சியும் நேரமொதுக்குதலும் என்று போய்க்கொண்டிருக்கும்..
நான் எடுத்தபின்னர் அதனை அந்த சாமான்ய தொழிலாளிக்குடும்பம் தங்களை ஒரு சினிமா போன்ற காட்சியில் பார்த்த மகிழ்ச்சியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. இதனால் என் முதல் குறும்படம் ஒரு வகையில் வெற்றியே.
camera --- sony DVD 703E
editing with -- picture package producer 2 and
windows movie maker
audio ----music india online and mp3mymp3 software
23 comments:
எனக்கும் ஆசையிருக்கு சீக்கிரமா மணிரத்னம் மாதிரி ஆகி தீபாவெங்கட் வச்சு படம் எடுக்கனும்ன்னு அதனால பதிவ படிச்சுட்டு வாரேன்!
/* நீங்கள் குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா? */
Yes
/* முதல் முயற்சி என்றால் என்ன செய்யவேண்டும் என்ற தயக்கம் இருக்கிறதா */
Yes.
நல்ல உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி.
அபி அப்பா மணி ரத்னமா அப்படி போடுங்க..
ஆகுங்க ஆகுங்க ஆனா
மணிரத்னம் தீபாவையெல்லாம் போட மாட்டாரு..அவர் ரேஞ்சே வேற அனு அகர்வால் ...மனிஷா ஐஸ்வர்யா இப்படி...
நன்றி வெற்றி சீக்க்கிரமே அப்ப ஒரு குறும்படம் உங்களிடம் இருந்து பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கலாமா?
முத்துலட்சுமி, தகவல்களுக்கு நன்றி.
//கடனோ உடனோ வாங்கி ஒரு கேமரா ஏற்பாடு செய்து//
இங்கதான் பிரச்சனையே :) உங்க கேமரா மாடலோட(Sony DVD 703E) விலை $260ன்னு இணையத்தில் பார்த்தேன். வரியெல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ஆகி விடும் போலயிருக்கே? இப்போதைக்கு ஜூட். :)
அய்யோ வாய்ஸ் ஆன் விங்க்ஸ் நாங்க வாங்கும் போது அதன் விலையகேட்டா என்ன சொல்லுவீங்க 42 ..இப்ப குறைஞ்சிடுச்சோ என்னமோ..இன்னும் கூட அதுல தனியா ப்ளாஷ் அண்ட் ட்ரைபாட் வாங்கணும் அதுக்கு .. ஒவ்வொன்னும் அதிகமா இருக்கு.
குறைந்த் விலையில் நிறைய மாடல்கள் இருக்கின்றன.
இன்னும் பல சிறு முயற்சிகள் செய்து...எங்களுக்கு பல தகவல்களை தாருங்கள் ;))
நானும் கூடிய விரைவில் இதற்கான பயிற்சியில் இறங்குகிறேன்.
நன்றி கோபி ...
எல்லாம் மண்டைக்குள்ள உட்கர்ந்து எதாச்சும் செய் எதாச்சும் செய் ங்கற ஒரு குறுகுறுப்பு தானே..செய்யுங்க செய்யுங்க.
MEENDUM MEENDUM KALAKKAL
SENSHE
நல்ல டிப்ஸ்...நான் ரொம்ப நாள் பேசிக்கொண்டே இருக்கிறேன்...இன்னும் கேமிராவை கையிலெடுத்த பாடு இல்லை..
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி
http://www.desipundit.com/2007/07/26/kurumpadam-2/
நன்றி சென்ஷீ.
------
நன்றி டுபுக்கு ..முதல் மறுமொழியோ இங்கே..இதை இணைப்புக்கொடுத்ததற்கு நன்றி..நானே இணையத்தில் படித்ததைத்தான் மொழிபெயர்த்து (ஒரிஜனலை படித்தவர்கள் தலையில் அடித்துக்கொள்ளாதீர்கள்) என்னால் ஆனது தமிழுக்கு. :)
சகோதரி.......
குறும்பட போட்டி பற்றி தகவல் இருந்தால் சொல்லவும்...
surendar இப்ப எதும் குறுபடம் போட்டி இருக்கான்னு தெரியல தெரிஞ்சா சொல்றேன்.
ungaldhu kurippgal miga miga payanuladhaga irundhadhu...mikka nandri...
நன்றி, அற்புதமான தகவல். இப்படித்தான் நான் 4 குறும்படங்கள் எடுத்து இருக்கிறேன் பார்த்துவிட்டு சொல்லுங்கள்
நன்றி, அற்புதமான தகவல். இப்படித்தான் நான் 4 குறும்படங்கள் எடுத்து இருக்கிறேன் பார்த்துவிட்டு சொல்லுங்கள்
ரமணன்.. எங்க போட்டிருக்கீங்க உங்க குறும்படங்களைன்னு தெரியலயே..எப்படி பாக்கறது..
--------------
மதன் .. எனக்கு படம் எடுத்தா என்ன செய்யரதுன்னு எல்லாம் தெரியாதுங்க..இணையத்தில் படித்ததைத்தான் பகிர்ந்திருக்கிறேன்.
nall priyosanamaka irukku naanum oru short flime eduthu kondu irukken
நன்றி வெற்றி சீக்க்கிரமே அப்ப ஒரு குறும்படம் உங்களிடம் இருந்து பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கலாமா?
http://sirumuyarchi.blogspot.in/2007/07/blog-post_20.html இந்த ரெண்டும் தாங்க என் முயற்சி..அப்பறம் ஒன்னும் செய்யல..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் லோககாந்தன்..:)
unmaya nanga romba kasta padrom yenga short film eduka..... apo oru movie eduka evlo kasta paduvanganu ipo purithu........ but innum naanga edukave start pannala..
ellarum short film kulla vanthutanga sema competition iruku..... thiramayanavargaluke vetri....... all the best for all competitors...
naangalum innum pesitu irukom aana start pannala coming saturday start panna porom...
ungaloda wishings yenga teamku theva frnds.......
vicky .. all the best .:)
Post a Comment