July 10, 2007

மினிபஸ் கவிழ்ந்தது

இன்று காலை பேப்பரில் முதல் செய்தி மினி பஸ் ஆமையைப்போல கவிழ்ந்ததாம்..24 குழந்தைகள் அடிப்பட்டார்கள். ஒரு குழந்தையின் தந்தை இறந்தார் .( அடுத்த குழந்தையின் சேர்க்கை விவரம் அறிய கூட்டத்தோடு அவரும். மருத்துவமனையில் குழந்தைகளையே அதிகம் கவனித்து அவரை சரியாக கவனிக்காததால் இறந்ததாக மனைவி தெரிவித்திருக்கிறார்).


தில்லி என்றாலே ப்ளூ லைன் பஸ்ஸின் அட்டகாசம் பற்றி எல்லாரும் அறிந்ததே..நாளொன்றுக்கு ஒரு பலியேனும் நடக்கவில்லை என்றால் அதன் அகோரபசி அடங்காது . (ப்ளூ லைன் என்பதற்கு பதில் ரெட் லைன்னு பேர் வச்சிருக்கலாமோ :( }



அவர்கள் தான் குடித்துவிட்டோ அல்லது கவனமில்லாமல் ஓட்டுகிறார்கள் என்றால்..பெற்றோர்களின் பொறுப்பின்மையைக்காட்டுகிறது இன்றைய நிகழ்ச்சி.. அந்த மினி பஸ் மெட்ரோ ரயிலுக்கான ஆட்களை ஏற்றிசெல்ல அனுமதி பெற்ற வண்டி. அதில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் பள்ளிக்கு ஏற்றிசெல்லப்பட்டிருக்கிறார்கள். அதுவும் 14 பேர் அமரும் பஸ்ஸில் 26 பேர்..
அதிக வேகம் தான் இதற்கு காரணம். இந்த ஆட்களை இறக்கி விட்டு அடுத்த சாவாரி போகவேண்டுமே...



பெற்றோர் குழந்தைகளை அனுப்பும் போது அந்த வாகனம் குழந்தைகளுக்கு ஏற்றதா என ஏன் யோசித்துப்பார்ப்பதில்லை..எத்தனை குழந்தைகளை அது அழைத்துப்போகிறது. அதன் வேகம் என்ன? அவர்கள் சரியாக ஓட்டுகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். ரிக்ஷா போன்ற வாகனங்களில் அதிகப்படி குழந்தைகள் செல்லும் போதும் மனம் பதைபதைக்கிறது. ஆட்டோவில் கூட இது தான் கதை..



இந்த முறை பொள்ளாச்சியில் நான் கண்ட காட்சி. ( மற்ற இடங்களிலும் இதான்கதை) ஆட்டோவில் பின்னால் இரு வரிசை நிறைய குழந்தைகள்..போதாக்குறைக்கு டிரைவரின் இருப்பக்கங்களிலும் இருவர்..அந்த சிறுவர்கள் வெளியே பார்க்க உட்கார்ந்திருக்கிறார்கள். ஓட்டும்போது அவருக்குத்தான் சிரமமாக இருக்காதா இல்லை குழந்தைகள் தான் சரியாக பிடித்து உட்காருமா? படித்த பெரிய பணக்காரர்கள் அவர்கள் குடும்பம்..அவர்கள் நினைத்தால் தனியாகவே வண்டி அமர்த்தலாம். காசுக்கு கொடுமை அதனால் கூட்டமாக அனுப்பினார்கள் என்று சொன்னாலே ஏற்றுக்கொள்ளமுடியாத விஷய்ம்.



இதே வாரம் தான் இன்னொரு குழந்தை தன் நாயை மருத்துவரிடம் காண்பிக்க சென்ற போது ஸ்கூட்டரில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.. பெற்றோர் சொல்கிறார்கள் நாயை அவனுக்கு ரொம்ப பிடிக்க்குமாம்..அது விழுந்துவிடக்கூடாதே என்று அவன் கவன்மாக கடைசிவரை பிடித்திருந்தான்.என்று,, முதலில் அவன் தானே சரியாக பிடித்திருக்கவில்லை என்பதை ஏன் கவனிக்கவில்லை பெற்றோர். தலைக்கவசம் அணிவதில்லை குழந்தையும் கவனமாக இருக்கவில்லை...வேன் வந்த வேகம் அதிகம் அது இடிக்க இவன் சக்கரத்தில் விழ ..கடவுளே !


ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனையோ கேட்கிறோம் . குழந்தைகள் பள்ளி சென்று திரும்புவதே பெரிய விஷய்மாகிவிட்டது ..

5 comments:

அபி அப்பா said...

எனக்கே பக்குன்னு ஆச்சு சேதிய படிச்ச பின்ன! அருமையான தேவையான பதிவு!

அபி அப்பா said...

இந்த ஆட்டோ கொடுமை மாயவரத்துல ரொம்ப மோசமா இருக்கு! தினம் தினம் பக் பக் தான்! தீர்வுதான் என்ன?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெற்றோர் கவனம் தான் இதற்கு ஒரே தீர்வு...எத்தனை ஏத்தறான்னு பாக்கணும்..பக்கத்துல இருக்கற பள்ளியில் போடலாம்..போய் கூப்பிட்ட்டுவரலாம்..டில்லி போன்ற பெரிய நகரங்கள் தான் கஷ்டம் போக வர..மாயவர்த்துக்கு பொள்ளாச்சிக்கு என்ன கேடு மிஞ்சி போனா எத்தனை கிலோ மீட்டரில் இருக்கும் பள்ளிக்கூடம்..

கோபிநாத் said...

:((((

பாவம் அந்த குழந்தைங்க ;((((

மங்கை said...

hmm..இது நித்தமும் நடக்குது போல.. இப்ப தான் கோர்ட் விளக்கம் கேட்டு இருக்காங்க..