July 17, 2007

தலையைச்சுற்றி ஒளிவட்டம்

சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நான் பார்த்தது என் அம்மா தினமும் அடுக்களையில் விழுகிற காய்கறி குப்பையை எல்லாம்சேர்த்துத் தொட்டி செடிகளின் மண்ணைக்கிளறி உள்ளே போட்டு மூடிவிடுவார்கள். இப்போதும் தில்லியில் என் வீட்டிலும் தொட்டி ஒன்றில் மண் போட்டு மூடி காய்கறிக்குப்பைகளை மக்க செய்வது என் வழக்கம்.



பெங்களூர் போயிருந்த போது என் சித்திப்பெண் வீட்டில் வாசலில் பெரிய டெரகோட்டா பானைகள் அடுக்கி இருந்தது, என்ன அழகு என்று பார்த்துக்கொண்டு இருந்த போது சொன்னாள் , இது குப்பைகளை மக்க செய்யும் கம்போஸ்ட் சிஸ்டம் என்று , எனக்கு ஒரே ஆச்சரியம். பார்ப்பதற்கு ஒரு கலைநயமிக்க டெரகோட்டா டிசைனாக இருக்கும் இது அடுக்களையில் தினமும் விழும் குப்பைகளை மக்க செய்து தோட்டத்துக்கு இயற்கை உரமாக்குகிறதே .
இது பற்றி மேலும் அவளிடம் கேட்டபோது கிடைத்த தகவல் களை இங்கே பகிர்கிறேன்.






டெய்லி டம்ப் என்பது தான் அதன் பெயர். ஹிந்துவில் வந்த செய்தி கட்டிங்க்....
Bangalore: Bangalore-based designer and educationist Poonam Bir Kasturi now has the distinction of being the first Indian to be nominated for the coveted international INDEX award, which focusses on "design to improve life".
The cost-effective, do-it-yourself kitchen-waste terracotta composter that Ms. Poonam has designed and irreverently named "Daily Dump", has made it to the final list of nominations of the INDEX award, considered one of the biggest international design honours.


தினமும் சமையல் செய்யும் போது காய்கள் பழங்களின் தோல் மற்றய பாகங்கள் மற்றும் வேண்டாத உணவுப்பொருட்கள் தான் அதிகம் குப்பையில் போடுகிறோம்.அவற்றை அப்படியே ஒரு பாலித்தீன் கவரில் போட்டு குப்பைக்காரனிடம் போடுவதை விட அவற்றை தனியா க சேர்த்துவைத்து மக்க செய்து உங்கள் வீட்டு த்தோட்டத்தின் செடிகளுக்கு உரமாக்கலாம்.செழிப்பாக வளரும்.தொட்டியில் செடி வைத்திருந்தால் உரம் கண்டிப்பாக அதற்கு தேவை .


இப்படி குப்பையை மக்க வைக்கும் போது எது மண்ணுக்கு நல்லது எது நல்லதில்லை என்பது தெரியவருவதால் தூக்கி எறியும் பொருள்மேல் கவனம் கொள்வோம்..ப்ளாஸ்டிக் மற்றும் பால்கவர்களைப்போன்ற மக்காத குப்பையைக்கூட குப்பைக்காரனிடம் கொடுக்காமல் கபாடி வாலா அதாங்க
பழைய சாமான் வாங்குகிறவனிடம் கொடுத்தால் அது நிச்சயமாக ரிசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி யால் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். காசுக்காக நான் போடுவதில்லை பழக்கம் இல்லை என்று சொல்லாதீர்கள் மறுசுழற்சிக்கு அனுப்பவாவது பழைய சாமான் ஆளைக்கூப்பிடுங்கள்.




(பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)


பூனம் செய்திருக்கும் அந்த மாடல் மிக அழகாக இருக்கிறது.
பெங்களூர் இந்திரா நகர் ஏரியாவில் என் தங்கை வாங்கி இருக்கிறாள். மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.சென்னையிலும் கிடைப்பதாகவும் அதன் முகவரி news எனும் தலைப்பின் கீழ் இருக்கிறது.




எனக்கு தில்லியில் இதற்கு கிளைகள் இருப்பதாக தெரியவில்லை. செயல்முறை விளக்கங்கள் படங்களுடன் அந்த தளத்தை ஒரு பார்வை பாத்ததற்கே என்னமோ ஒளிவட்டம் சுத்தறமாதிரி தான் இருந்தது.



அதற்காக விளம்பரத்திற்கு செய்திருக்கும் ஒரு வீடியோவைப்பாருங்களேன்...அட்டகாசமா எடுத்துருக்காங்க...சாப்பிட்டு முடிச்சதும் தட்டுல இருக்கற மிச்சமீதி எல்லாம் எடுத்து மக்க செய்யப் போடபோகும் போது அப்படியே சந்தோஷமா டிவைனில்லியா உணருகிறார்களாம் தலைக்கு பின்னால் ஒளிவட்டமும் கால்கள் தரைக்கு கொஞ்சம் மேலாக அப்படியே மிதக்கிறாங்களாம்.. :)


34 comments:

கோபிநாத் said...

நான் தான் பர்ஸ்ட் :)))))

கோபிநாத் said...

\\(பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)\\

ஆஹா...இது சூப்பர் விஷயமாக இருக்கே !!!!!!!

துளசி கோபால் said...

உண்மைக்குமே இது நல்ல பதிவுங்க.

அந்த டெர்ரகோட்டாத் தொட்டிகளின் அழகுக்காகவே வாங்கி வச்சுக்கலாம்.

கோபிநாத் said...

\\ைக்கு பின்னால் ஒளிவட்டமும் கால்கள் தரைக்கு கொஞ்சம் மேலாக அப்படியே மிதக்கிறாங்களாம்.. :)\\

பயனுள்ள விஷயங்கள்...உங்கள் பதிவின் மூலம் எல்லோர் தலையிலும் கூடிய விரைவில் ஓளிவட்டம் வரும்.

ஷைலஜா said...

நல்ல தகவல்கள் முத்துலட்சுமி..பாராட்டு!

அபி அப்பா said...

நல்ல பயனுல்ல கட்டுரை! நிச்சயம் செயல்படுத்த போகிறேன்! நான் ஒரு செடி அல்ல ஒரு பெரிய தோட்டமே வைத்திருக்கிறேன்!(கிடேசன் பார்க்)

Santhosh said...

அட நல்ல பயனுள்ள செய்தி தான்.

வடுவூர் குமார் said...

மண்,அதுவும் பிளாட்டில் வாழ்பவர்கள் காணவே முடியாத பொருள்.எங்காட்கள் எல்லா இடத்திலும் சிமின்டை போட்டு மூடி விடுகிறார்கள்.
நுட்பம் நன்றாக இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நீங்க தான் பர்ஸ்ட்..
சந்தோஷமா?
எல்லார் தலையிலும் ஒளிவட்டம்வரணும்
அதுக்குத்தானே போஸ்ட் போட்டுரூக்கேன்.
----------

துளசி உண்மைக்காவேவா ? அப்ப சரி..இன்னும் அதில் எத்தனை மாடல் இருக்கு பாத்தீங்களா அந்த சைட் போய்..செடியோட ஒரு கம்லா மாடல் இருக்கு ஒவ்வொன்னும் அழகு தான்.

------
நன்றி ஷைலஜா , பூனம் தனக்கு தெரிஞ்சதை ரொம்ப சரியா மார்க்கெட்டிங் பண்ணி இருக்காங்க..

Ayyanar Viswanath said...

பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ஒன்றும் கூட..

SurveySan said...

Excellent!

but, why did the house have more than one 'daily dump's ? or was there only one in that video ?

Radha Sriram said...

ரொம்ப நல்ல கட்டுரை முத்துலக்ஷ்மி.....

பழ தோலையும் காய்கறி தோலையும் மக்கி போரதுக்காக போடர குழில கொஞ்சம் மண் புழுவையும் போட்டோம்னா.....அந்த மண் நல்லா இன்னும் fertile la ஆகிடும்.இந்த மண்ணையே நம்ம தோட்டதுக்கும் பூந்தொட்டிகளுக்கும் உபயோக படுத்தலாம்......

http://mypeoplepc.com/members/arbra/bbb/id19.html

இந்த சைட்ல மண்புழுவால எவ்வளோ நன்மைன்னு போட்ருக்காங்க....

பாராட்டுக்கள் முத்துலக்ஷ்மி......!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபிஅப்பா உங்களுக்கு என்ன இங்க வீட்டில் தான் சுத்தியும் இடம் இருக்கே..செய்யலாமே . கிடேசன் பார்க்கு போட்டோ இருந்தா அனுப்புங்க..(உண்மையா என்னன்னு தெரியனும்)

-------
சந்தோஷ் பயனுள்ள செய்திதானே சந்தோஷம். :)

------
வடுவூர்குமார் , இவர்கள் சொல்வதைப்பார்த்தால் மண்ணே தேவையில்லை மண்ணை நீங்களே உருவாக்குகிறீர்கள். ப்ளாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக தோன்றுகிறது.
------
அய்யனார் கவிதையைத்தான் முதலில் போடலாம்ன்னு இருந்தேன் கிடச்ச சந்தர்ப்பம் பார்த்து கொடுமை செய்யறாங்கன்னு யாரும் நாக்கு மேல் பல்ல போட்டு பேசிடக்கூடாது இல்லயா அதான் முதல்ல பயனுல்ள கட்டுரை அப்புறம் கவிதை.(அல்லது அதுமாதிரி ஒரு அமைப்பு)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் யாருக்கு எந்த மாடல் வேண்டுமோ எடுத்துக்கறமாதிரிஅதாவது வீட்டில் இருக்கும் ஆட்களுக்கு தகுந்த மாதிரி அளவுகளில் கிடைக்குதாம்..
ஒரு வேளை அவங்க வீட்டில் பாருங்க தோட்டமும் பெரிசாக இருப்பதால் நிறைய வாங்கி வ்ச்சு நிறைய கம்போஸ்ட் செய்யறாங்க போல...

எத்தனை குப்பை விழுமோ வீட்டில் அத்தனை வச்சுக்கவேண்டியது தானே..ஒரு சைக்கிள் முடிய நாள் ஆகுமே ..அது வரை மத்ததை எங்க போடறது..இதுக்கே இடம் அடச்சுக்கிட்டா என்னபண்னரதுன்னு கேக்கறீங்களா ...பழக்கத்தில் தான் தெரியும்

-------
ராதா ரொம்ப நன்றி லிங்க் பாக்கறேன்..
மண்புழு சேர்ப்பது நல்லது தான்..அதுக்கும் என்னவோ சீக்க்ரம் கம்போஸ்ட் ஆக என்ன்மோ பௌடர் வேற கிடைக்குதாம்.

அறிவியல் பார்வை said...

தோழிக்கு நன்றி, நான் வலை பதிவிற்க்கு புதியவன், இன்று தான் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது,வெர்மி கம்போஸ்ட் குறித்து பேசிவரும் செய்துவரும் எங்களை போண்றோர்கு உங்கள் கட்டுரை கூடுதல் தகவள்..."எதையும் வீணாக்க கூடாது என்ற மனபான்மையே சரியான முன்னேற்றத்திர்க்கு வழி வகுக்கும்.."

Deepa said...

ரொம்பவே உபயோகமான தகவல்...ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவது போல.. அவரவர் வீட்டை சுத்தமா ( தெருவிலே குப்பஒ போடாம) வச்சோம்ன்னாலே சுற்றுப்புற மாசு பாதிக்கு மேலெ கம்மியாயிடும்... அப்புறம் ஒரு சந்தேகம்.. இதிலே நாம் Food & VEgetable waste போடுறொம்... அப்போ கப்பு நாத்தம் வராதா.. இல்லை அதுக்கு எதாவது வழி இருக்கா ? ? ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அறிவியல் பார்வை மறுமொழிக்கு ரொம்ப நன்றி.. எந்த ஒரு பொருளும் இன்னோன்னாத்தான் மாறி ஆகணும் அதை என்ன செய்யறோம்ங்கறது தான் விசயமே..

------
தீபா அது ஸ்மெல் அடிப்பதில்லை..கலக்கி விடனும் கையில் கிளவுஸ் போட்டுக்கோங்க..
பதமா செய்தா கப்பு அடிக்காது..என் வீட்டில் இந்த மாடல் வாங்கலை சாதாரண தொட்டியில் மண் போட்டு அதனுள் குப்பைகளைப்பொட்டு இவர்கள் சொல்லி இருப்பது போல நியூஸ் பேப்பர் போட்டு மூடினால் ஸ்மெல் வருவதில்லை..கொஞ்ச நாள் ஆனதும் அது மண்வாசனை மழைக்கு பின் வருமே அதுபோல இருக்கும். கருப்பு கலரில்.
கிளறீக்கொடுக்கணும் கொஞ்சமா..அப்பப்ப..காற்று நீர் வேணும் ஆனா சொதசொதன்னு இருக்கக்கூடாது...வீட்டுக்கு வெளியே தான் வைக்கறோம் கொஞ்சமா ச்மெல் வந்தா பரவால்ல இல்லயா...

குசும்பன் said...

"பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)"

உங்க நல்ல மணசு இதன் மூலம் தெரிகிறது அக்கா, நிச்சயமாக பயன் உள்ள செய்தி.
வாழ்க வளமுடன்

மாலன் said...

அன்புள்ள லட்சுமி,

இந்த மாதிரி ஒன்றைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.

நன்பர்களுக்குப் பரிசாக அளிக்கலாம் என எண்ணுகிறேன். என்ன விலையாகும்?

அன்புடன்,
மாலன்

ALIF AHAMED said...

அய்யனார் said...
பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ஒன்றும் கூட..
//

ரீப்பிட்டேய்ய்ய்



(நான் எதாவது பின்னுட்டம் போட்டா யாருமே ரிப்பிட்டே போடமாட்டங்கிறாங்கனு சொன்னாரு அதான் போட்டாச்சி.. :) )

லக்ஷ்மி said...

நல்ல பயனுள்ள தகவல் முத்து. கண்டிப்பா இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன்.

Aruna Srinivasan said...

இப்படி பெரும்பாலான விஷயங்கள் இயற்கையான ஒரு சுழற்சியிலே இயற்கையுடன் கலந்து விடுகிற மாதிரி நமது வாழ்வு முறை அமைந்து இருக்கு என்பதும் ஒரு சுவாரசியமான விஷயம். நடுவுலே காணாமல் போய் இப்போ நாம இது போன்ற முறைகளை fashion / contemporary lifestyle என்ற முறையிலாவது பயன்படுத்த ஆரம்பிச்சா சுற்றுச்சூழல் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுமோ! :-) இந்த wormi - composting முறை மட்டும் கொஞ்சம் சங்கடமா நெளிய வைக்குது - புழுப் புழுவா நெளியறது என்னை மாதிரி ஒரு concrete jungle ஆளுங்களுக்கு நெளிய வைக்காம என்ன செய்யும்? ஹ்ம்ம்... கழுதையும் கற்பூரமும் நினவுக்கு வந்தால் அது என் தவறில்லை :-) முத்துலஷ்மி, அருமையாக ஒரு விவரமான - அவசியமான பதிவு போட்டிருக்கீங்க.

கண்மணி/kanmani said...

வாவ் கிரேட் முத்துலஷ்மி .மிக அருமையான பதிவு.ஆனா நட்சத்திர வாரத்திற்கு உரமாகட்டும்னு 'கம்பா' வுல பதுக்கி வச்சிருந்தீங்களா?;)
இது நம்மூர் பக்கம் கிடைக்கனுமே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் நானும் கூட ஒரு காலத்தில் இந்த பால்கவரை திருப்பி கழுவி தூக்கி போடவில்லை..ஆமா ஒரு சொட்டில் என்ன போகுது என்று..
ஆனால் பேப்பரில் படித்து அப்படி ஒரு தோல் வியாதி குப்பை எடுப்பவர்க்ளுக்கும் மறுசுழற்சி செய்பவர்களுக்கும் வருகிறது என்று அறிந்த போது மாறிவிட்டேன்.
--------
மாலன்...அதன் விலை அந்த தளத்தில் இல்லை..கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்.
---------
மின்னுது மின்னல் பரவாயில்லையே! நட்புக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அலய்ன் சந்திப்பிலிருந்து நன்றாக தெரிந்து விட்டது..இப்போது அய்யனாரின் ஆசையை நிறைவேற்றி
மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.
--------
லக்ஷ்மி ரொம்ப சந்தோஷம் ...அப்ப டிவைன்லி யா உணரப்போகிறீர்கள் ...
-------
வாங்க அருணா , ம்...பழய நெக் சோளி பழய ஹேர் ஸ்டைல் மாத்ரி எல்லாமே ஒரு நாள் திரும்பி வரும் போல...நல்லது எப்பவந்தாலும் நல்லது தானே.

------
ஆமா கண்மணி பதுக்கித்தான் வைத்திருந்தேன்..ஏன்னா எனக்கு ஊருக்கு போறதுக்கு முன்னமே தெரியும் இல்லயா வந்து நட்சத்திரவாரம் இருக்குன்னு அதான் . :)இப்படி ரகசியத்தை போட்டு உடைக்கிறீங்களே.

ஒன்னும் இல்ல இப்ப போட்டதால் நிறைய பேருக்கு போய் சேரும் என்கிற ந்ல்ல எண்ணம் தான்.

siva gnanamji(#18100882083107547329) said...

மூன்று பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.......
அருமையாக இருந்தன!
க.கை.நா வுக்கு பேடண்ட் ரைட் கேட்டு எனக்கும் துளசிக்கும் தாவா நடக்குது;இப்ப நீங்க வேறயா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவஞானம்ஜி வரணும்...ஒரே மூச்சில் படிச்சீங்களா ...நல்லா இருந்ததுன்னா சரி தான்...நீங்க முத்ல் பின்னூட்டம் போட்டு ஆரம்பித்த பதிவு ...பாருங்க நட்சத்திர பதிவராகியாச்சு ...நன்றி .

Thekkikattan|தெகா said...

நல்ல பயனுள்ள பதிவு! இங்கு கொணர்ந்தமைக்கு ஒரு சிறப்பு நனிறிங்க.

Anonymous said...

ஊர் உலகம் உய்திட
உரம் ஊட்டும் உங்களுக்கு
உவமையுடன் நன்றி பல. ;-)

SurveySan said...

இதே அலைவரிசையில், நம்ம ஊர்ல solar cell உபயோகப்படுத்தி கரெண்ட் செலவை குறைக்கமுடியுமான்னு யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னா நல்லா இருக்கும் :)

எங்க கிடைக்குது, எவ்ளோ ஆகுது, வேலை செய்யுதா, etc...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறூமொழிக்கு நன்றி தெகா...

-------
அனானி ரொம்ப நன்றி மறுமொழிக்கு
முடிந்தால் இனி பெயருடன் பின்னூட்டமிடுங்களேன்.
-------
நீங்கள் சொல்வது என்ன என்று தெரியவில்லை எனக்கு,
யாரும் தெரிந்தால் சொல்லட்டும் சர்வேசன்..

Unknown said...

பயனுள்ளத் தகவல்!!!

அடுத்த தடவை பெங்களூர் வழியாப் போகும்போது வீட்டுக்கு ஒன்னு வாங்கிட்டுப் போயிட்றேன்... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருட்பெருங்கோ சென்னையின் முகவரியும் அந்த தளத்தில் இருக்கிறதே சென்னையிலும் வாங்கலாம்.

வின்சென்ட். said...

மிக உபயோகமான தகவல். எளிதாகவும்,விரைவாகவும்,துர்வாசணையும் இன்றி மக்க வைக்க EM பயன்படுத்துங்கள். விபரம் பெற எனது ''புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்'' பதிவில் 19 வது செயல் பார்க்க.

உங்கள் கேள்வி.

நான் ஊருக்குப்போகும் போட்து செடிக்கு தண்ணீர் விட ஒரு முயற்சி செய்தேன்..பைப் ஒன்றில் துளைகள் நிறைய இருக்கிற மாதிரி அது எல்லா த் தொட்டிக்கும் சொட்டி சொட்டி தண்ணீர் விடுமாறு ஆனால் அடித்த காற்றில் கட்டி வைத்திருந்ததெல்லாம் நகர்ந்து சரியாக விழாமால் சில செடிகள் இறந்துவிட்டன..அது போன்ற வீட்டுச்செடிகளுக்கு எதும் ஏற்பாடு செய்யமுடியுமா ...ரெடிமேடாக ஒரு சிஸ்டம் .


கண்டிப்பாக செய்யமுடியும். சுத்திகரிக்கப்பட்ட தென்னை நார் கழிவு + மண்புழு உரம் அதிகமாக தொட்டியில் இட சுமார் 4 நாட்கள் வரை கவலை இல்லை. இவற்றுடன் Gel சேர்க்க சுமார் 7-10 நாட்கள் வரை கவலை இல்லை. இது சீசனையும் இடத்தையும் பொறுத்து மாறும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் மறுமொழிக்கு நன்றி வின்செண்ட்..முன்பே நீங்கள் சொன்ன உங்களின் அந்த பதிவைப்படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்.