பதிவுகள் எழுதுவது நம் அன்றாட வாழ்வின் அழுத்தத்தை குறைக்கிறது. நட்பு வட்டத்தை ஏற்படுத்துகிறது .தனித் தமிழில் பேசுவதும் எழுதுவது குறைந்து விட்ட இந்த நேரத்தில் அவற்றை நமக்கு பழக்கத்தில் வைத்திருக்க ஒரு வித வாய்ப்பைத் தருகிறது. மேலும் நம் எண்ணங்களை பதிகிற ஒரு தளமாக இருக்கிறது.
நமக்கு தெரியாத விசயங்களை கற்றுக்கொள்ளவும் வகையாக இருக்கிறது. இப்போது தமிழில் புகைப்படக்கலை என்று தனித்தனியாக துறை சார்ந்த பதிவுகள் வரத்தொடங்கி வெற்றி நடை போட இன்னும் இன்னும் இத்தளத்தில் இயங்குவதில் ஆர்வம் மிகுகிறதே தவிர எப்போதும் தோன்றுகின்ற , போதும் அடுத்தது என்ன என்கிற எண்ணம் இல்லை.
எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மையையும் தீமையையும் கொண்டதாகவே இருக்கும் . இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பயன் படுத்தி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை எல்லாருக்கும் இருக்கிறது.
மா.சிவக்குமார் நெய்தல்கரை பக்கத்தில் பேசி இருந்த ஒலிப்பதிவு கேட்டதிலிருந்து அவ்வப்போதாவது உபயோகமான தகவல்களைப் பதிய எண்ணம்.
இன்னும் இன்னும் அறிவியல் பார்வை , மண் மழை மரம் மனிதன் என்றும் பதிவுகள் வித்தியாசமான முறையில் வரத்தொடங்கி இருக்கிறது.அவர்களும் எப்பவாவது மட்டும் பதியாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
டெல்பின் மருத்துவர் என்பதால் மருத்துவம் சம்பத்தபட்ட பதிவுகளை இட்டு அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை முளைத்திருக்கிறது. குடிப்பழக்கம் இருப்பவரிடம் கோபமோ வெறுப்போ காண்பிப்பதால் எந்த பயனுமில்லை என்று சொன்ன அவர்கள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய பதிவு இட்டிருக்கிறார்கள் (தெரிந்து கொள்ளுங்கள் )
குழந்தைகளுக்கென புதிதான தளத்தில் கதை சொல்கிறார்கள்.
மாயவரம் கோயிலைச் சுத்திக்காட்டி இருக்காங்க இதுபோல இன்னும் இன்னும் நிறைய நான் படிக்கும் பல பதிவுகள் மகிழ்ச்சியைத்தருகின்றன.
24 comments:
தூங்கலையா...!
தூக்கம் வரலையா...!
(இது ஒரு மொக்கை பின்னூட்டம்)
எப்பவுமே முதல் பின்னூட்டம் அப்படித்தான் வருகிறது :)
எல்லாத்தையும் சொன்னீங்க...ஒருத்தர மிஸ் பண்ணீட்டீங்க....
இங்க யாரோ ஒருத்தர் பங்குவணிகம் பத்தி தெனமும் கிறுக்கராறாம்....
ஹைய்யா...நான் தான் 2வது ;)))
\\முத்துலெட்சுமி said...
எப்பவுமே முதல் பின்னூட்டம் அப்படித்தான் வருகிறது :)\\
இந்த பின்னூட்டத்திற்கும் அந்த அப்பா பதிவருக்கும் சம்பந்தம் இல்லை ;)))
அம்மினி...இது என்ன..ஒரு 8 மணி நேரம் பொருக்க முடியாதா?...
ஹ்ம்ம்
பங்காளி உங்களை எல்லாம் பத்தி வலைச்சரத்தில் எழுதி நீங்கள்ளாம் எழுதறது தமிழ்மண முகப்பில் துறைசார்ந்த பதிவுகள் என்று வரத்தொடங்கிவிட்டட்து...நீங்கள்ளாம் பெரியாளுங்க..:)
நான் போட்டது பூரா இந்த மாதம் வந்த பதிவுகள்..சரியா ?
கோபி நாத் இரண்டாவதாக பின்னூட்டம் உங்களுது தான் பங்காளியின் இரண்டவதும் என்னோடதும் ஆட்டத்தில் இல்லை..
அப்பாபதிவருக்கு சம்பந்தம் இல்லயா சரிதான்...இதெல்லாம் அதிகமப்பா..
\\இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பயன் படுத்தி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை எல்லாருக்கும் இருக்கிறது.\\
உண்மை... உண்மை....கண்டிப்பாக செய்வோம் ;))
உங்கள் பதிவின் மூலம் மற்ற அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்
வாழ்த்துக்கள் முத்துலட்சுமி 101 க்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் முதலில் சதம் அடிக்க நினைத்து 87 லே நிக்குது.கும்மி,குட்டீஸ் சாய்ஸ்,ப.பா.ச,வ.வா.ச ன்னு டைவெர்ஷன்ஸ்.
இருக்கட்டும் இந்தியா சுதந்திரம் அடைவதற்குள் 100 அடிக்கிறேன்.
100 ஆ? அம்மாடியோவ்.... யக்கோவ்... மெய்யாலுமே நீ சூப்பர் தான்... நட்சத்திரமா சும்மாவா செலக்ட் பண்ணாங்க. வாழ்த்துக்கள். கலக்குங்க ராசாத்தீ.
நூத்துக்கு நூத்தியொண்ணா!!!!
வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துக்கள்
முத்துலட்சுமி,
நூறுபதிவுகள் கண்டமைக்கு வாழ்த்துக்கள்.
/* வேறு எந்த காரியத்தையும் இத்தனை ஈடுபாட்டோடு செய்திருப்பேனோ என்னவோ அந்த அளவு மிக வும் ஈடுபாட்டோடும் ஒருவிதமான மனநிறைவோடும் இங்கே பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன் */
உங்களின் தன்முக அறிமுகத்தைப் [profile] பார்த்தேன். தமிழ்மணத்தில் இணைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் 100 பதிவுகள். உண்மையில் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் பதிவுகள் எழுதுகிரீர்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
/* தனித் தமிழில் பேசுவதும் எழுதுவது குறைந்து விட்ட இந்த நேரத்தில் அவற்றை நமக்கு பழக்கத்தில் வைத்திருக்க ஒரு வித வாய்ப்பைத் தருகிறது...
நமக்கு தெரியாத விசயங்களை கற்றுக்கொள்ளவும் வகையாக இருக்கிறது */
உண்மை.
உங்களின் பல பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் விரும்பி வாசிக்கும் பல பதிவர்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி தமிழ்மண வாசகர்களை மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணைபுரிவானாக.
பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது மங்கை...அது எப்படி ட்ராப்டாக வைத்திருப்பது... :)
--------
கண்மணி நன்றி...ம்..நீங்க பெரியாளுங்க...வந்தவுடனே நட்சத்திரம் ஆன ஆளாச்சே..நானும் சிந்தாதியின் "சாப்பிடவாங்க"வில் ஒரு நாலு போஸ்ட் போட்டதா நியாபகம். அத சேர்த்தா அதிகமாகும்.
-------
காட்டாறு உங்கள் அன்புக்கு நன்றி அதிகப்படியா சொல்லாதீங்க எதோ தொடர்ந்து எழுதுதே போட்டும்ன்னு வேனா எடுத்துருப்பாங்க..
துளசி நன்றீ நன்றீ.ரொம்ப கவனமா எப்போதும் வாழ்த்து(க்)கள் என்று போடுகிறீர்கள்.
---------
தீபா நன்றிப்பா
-----
டெல்பைன் எதற்கு நன்றீ உங்கள் நேரத்தை இங்கு செலவிடுவதற்காக படிப்பவர்கள் தான் நன்றி சொல்லவேண்டும்.தொடருங்கள் உங்கள் சேவையை.
------
வெற்றி மிக நீண்டதொரு பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர்ந்த உங்கள் வாசிப்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி.
//எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மையையும் தீமையையும் கொண்டதாகவே இருக்கும் . இணையத்தின் எல்லையில்லா தன்மையை நன்மைக்கு பயன் படுத்தி நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை எல்லாருக்கும் இருக்கிறது./ /
உங்கள் மதிப்பீடு நன்று,அடுத்த தலைமுறை குறித்த அக்கறை கண்டு மனம் மகிழ்கிறேன்
நன்றி தோழி, உங்கள் நூற்று ஓராவது பதிவில் அறிவியல் பார்வை பற்றி சொல்லி யுள்ளதற்கு,தொடர் ந்து பதிய முயற்சிகிறேன்,
நன்றி அறிவியல் பார்வை தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
100 பதிவுகளா- ஆ !!
என்னுடைய ஆச்சரியம் என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கையினால் வந்தது.
நன்றி சென்ஷி ...
----
நன்றி ஒப்பாரி ,ஆமா உங்களுக்கு ஆச்சரியமாத்தான் இருக்கும்..ஒப்பாரி ஒரு 100 பதிவு போடனும் ன்னா.
100 போட்டோ போட்டிகள் வைக்கணும் :)அப்பத்தானே பதிவு போடுவீங்க.
//ஒப்பாரி ஒரு 100 பதிவு போடனும் ன்னா.
100 போட்டோ போட்டிகள் வைக்கணும் :)அப்பத்தானே பதிவு போடுவீங்க.//
எப்படியும் மாசம் ஒன்னு இருக்கு கவலைபடாதீங்க அடிச்சி தூள் கிளப்பிடலாம். என்ன அதிலயும் இரண்டு வரிக்குமேல எழுத முடியல.
நேத்து நான் தமிழ்மணத்துக்கு லீவ் விட்டதிலே இந்த பதிவு விட்டு போச்சு!இப்ப படிக்கிறேன்!
ஹய் நம்ம பதிவுக்கும் லிங் குடுத்தாச்சா! மிக்க நன்றி! மிக்க நன்றி!
Post a Comment